புதன், அக்டோபர் 24

நூல் விமர்சனம்


ஆவணங்களின் அடிப்படையில் எழுதப் பட்டதாக இதன் ஆசிரியர்கள் சொல்கின்றனர்.  இதில் சொல்லப்படுகிற நிகழ்வுகள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துக்களை கவனிக்கும் போது, இது சாதியத்தை உயர்த்தி பிடிக்க எழுதப்பட்ட நூலாக தெரிகிறதே தவிர தெரியாத உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நூலாக தெரியவில்லை

நாடார் சமுதாய பெண்டீர் தோள்சீலை அணிந்து வாழ்ந்தனர் என்றும், மேல்சாதி பெண்டீர்கள்தான் தோள்சீலை அணியாமல் வாழ்ந்தனர் என்றும் நிழற்பட ஆதாரத்துடன் நிறுவ முயற்சி செய்துள்ளனர்.

இதுபோன்ற நூல்கள் எழுத முற்படுகையில் சற்றேனும் களப்பணி செய்து செய்திகள் சேகரித்து எழுதியிருக்க வேண்டும்.  எழுத்தாளர் சு. சமுத்திரம் அவர்கள் இது தொடர்பாக களப்பணி செய்து செய்தி சேகரித்ததாகவும் ஆனால் அதற்குள் இயற்கை எய்தி விட்டதாகவும் சொல்ல கேள்விபட்டிருக்கிறேன்.

ஆண்ட பரம்பரை என்ற எண்ணத்தில் எழுத நினைத்ததால் அவமான படுத்தியதைப் பற்றி ஆவணங்கள் இருந்தாலும் தவிர்த்திருக்கிறார்கள்.

நாடார், சாணார், கிராமணி என சாதியை பட்டியலிட்டு வைத்திருந்தாலும் நூலாசிரியர் அச்சாதியை குறிப்பிடுகையில் சான்றோர் சாதி என்று வழக்த்திலும் பயன்பாட்டிலும் இல்லாத சொல்லை பயன் படுத்துவதே தான் உயர்ந்த சாதி - சூத்திரன் அல்ல சத்திரியன் என்று சொல்வதற்காக எழுதியிருக்கின்றனர்.


இக்கலகம் நடந்ததாக கூறப்படும் இரணியல் மற்றும் அதன் வட்டாராத்தில் எத்தனை நாடார் மக்களை சந்தித்தனர் அதைவிட எதிர் சாதி மக்கள் எத்தனை பேரை சந்தித்தனர் என்றால் ஒருவருமில்லை.


தெரியாத உண்மைகள்


1836 ஆம் ஆண்டில் திருவிதாங்கோடு சமஸ்தானத்தில் 1,64,864 அடிமைகள் இருந்தனர் எனக் கணக்கிடப்பட்டது. ,,,,,,  இந்தஅடிமமைகள் அனைவரும் தாழ்த்தப்பட்ட சாதியினரான செருமர், புலையர், சாம்பவர் (பறையர்) முதலியோர்களே

ஆங்கிலேய கும்பினி அரசு 1843 ஆம் ஆண்டு Act V (ஐந்தாம் பிரிவுச் சட்டம்) ஒன்றைப் பிரகடனப்படுத்திற்று.  அதன் மூலம் இந்தியாவில் அடிமை முறை ஒழிக்கப்படுகிறது என அறிவித்தது.

நெய்யாறிங்கரை, இரணியல் பாறைச்சாலை ஆகிய ஊர்களில் அடிமைச் சந்தை இருந்து வந்தது உண்மையே,  இங்கெல்லாம் பெரும்பாலும் உயர் வர்க்கச் சான்றோர் உட்பட நிலவுடமைச் சமூகத்தவர் உழுவு தொடர்பான பணிகளுக்காக வாங்கி விற்று பரிவர்தனை செய்து வந்தனர்.


நூலின் பக்கம்  152 மற்றும் 153

குட்டத்தை சுற்றிக் கொம்மடிக்கோட்டை, படுகைப்பற்று, செட்டியாபற்று, தண்டுபற்று...........காயாமொழி போன்ற ஐம்பதற்கும் மேற்பட்ட நிலைமைக்கார நாடார்களின் ஊர்கள் உள்ளன.  அவ்வூர்களில் அரச குலச் சான்றோரான நிலைமைக்கார நாடார்கள் வாழ்ந்து வந்தனர்.  அவர்களெல்லாம் தம் குடிகள் மீது தொடர்ந்து தம் அதிகாரத்தைச் செலுத்திவந்தனர்.

நூலின் பக்கம்  132


....கிறிஸ்தவ சமயத்தில் சேராமல் இந்து சமயத்திலேயே நீடித்து நின்ற சான்றோர் சமூகத்தவர் மத்தியில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கித் தங்களை இத்தகை நிலையில் வைத்திருப்பது இந்து சமயமே என்ற குரோதத்தையும், தங்கள் குலப் பாரம்பரியம் குறித்த இழிவுணர்வையும் உருவாக்க வேண்டும் என்ற நோக்கமாகும்


நூலின் பக்கம்  133


எல்லிஸூக்கு தமிழ் கற்பித்த இராமச்சந்திர கவிராயர் (சத்திரிய ராஜூ இனத்தவர்) சென்னை கல்விச் சங்கத்துத் தலைமைப் புலவர்களுள் ஒருவராவார்.  அவர் 1824 ஆம் ஆண்டில் அரச குல பஞ்சரத்னம் என்ற பெயரில் ஐந்து பாடல்களை  இயறியுள்ளார்.  அவர் அரசர்குலம் என்று குறிப்பிடுவது கிராமணி குலத்தவராகிய சான்றோர்களையே.
நூலின் பக்கம்  127

ஆங்கிலேயர்களின்........... ஜாதியக் கொடுமைகளிலிருந்தும் ஒடுக்க முறைகளிலிருந்தும் தப்பித்து உய்வடைவதற்காகச் சான்றோர் சாதியினர் யாரும் மதம் மாறவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்

நூலின் பக்கம்  119


1829 ஆம் ஆண்டு அரசு பெயரில் வெளியிடப்பட்ட ஆணையின் படி........ இந்த ஆணை சான்றோர் சமூகத்தவருக்குத் திருப்தியளிக்கவில்லை தங்களை விடச் சாதியடுக்கில் தாழ்ந்த அந்தஸ்தில் இருக்கின்ற முக்குவத்திகள் போலத் தங்கள் சமூகப் பெண்டிரும் உடையுடுத்துவதா என்று அவர்கள் அதிருப்தியடைந்தனர்

நூலின் பக்கம்  108  மற்றும் 109


..........இந்தப் பின்னணியில் பார்க்கும்போது சான்றோர் சமூகத்தின் கீழ் அடுக்களிலிருந்த சேர்வைக்காரச் சான்றார், பனையேறிச் சான்றார் போன்றவர்கள் புராடெஸ்டெண்ட் கிறிஸ்தவ சமயத்தில்பால் ஈக்கப்பட நேர்ந்தது.

நூலின் பக்கம்  104


....... நாடாள்வான் என்ற பட்டப் பெயரின் திரிபான நாடான் என்ற சாதிப் பட்டத்தை சூட்டிக் கொள்ளும் உரிமையை இக்காலகட்டம்வரை கள்ளச் சான்றார்கள் பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

நூலின் பக்கம்   64

சான்றோர் சமூகத்தின் கீழ்மட்டத்தை சேர்ந்தவர்களே இத்தகைய தாக்கதலுருக்கு ஆளாயினர் என்பதால் உயர்மட்டச் சான்றோர் குலப்பிரிவினர் தமக்கு இப்பிரச்சினையில் எந்தவிதத் தொடர்பும் இல்லாததுபோல் காட்டிக் கொண்டு அமைதிகாத்தனர்.

நூலின் பக்கம்   27

ஆரம்ப பக்கங்களில் நூலாசிரியர்கள் பத்தாம் நூற்றாண்டிலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டு வரை ஆதாரம் தேடியிருக்கிறார் ஆண்ட பரம்பரை இந்த சான்றோர் குலம் என நிறுவுவதற்கு

மேற்காணும் மேற்கோள்களை படித்தாலே போதும்  நூலின் முரண் தெரியும்.  
  • 1980 ஆண்டு கூட இந்த நாடார் சாதியினர் இரணியல் போன்ற ஊர்களில் வேளாளர் இல்லங்களில் உள்ள தறிக் கூடங்களில் வேலை செய்ய தெரு வழியாக வீட்டின் உள்ளே செல்ல இயலாது. வீட்டின் பின்புற வழியாகதான் உள்ளே நுழைய முடியும்
  • ஆக நூலாசிரியர் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை நூலை படித்தோ அல்லது மேற்கண்ட மேற்கோள்களை படித்தோ அறிந்து கொள்ளவும்
நான் அறிந்து கொண்டது
  • அடிமையில்லை, உருமால் கட்டி ஊரை ஆண்ட பரம்பரை என சொல்ல வருகின்றனர்.
  • சான்றோர்கள், இந்துக்கள் அவர்கள் கிருஸ்தவர்களாக மதம் மாற்றப்பட்டனர்.  பிராமணர்களை புறந்தள்ளி பண்டாரங்களை கொண்டு வழிபாடு செய்து வந்த இந்த இனத்தை ஆசிரியர்கள் சாதி இந்துக்களாக நிறுவ முயற்சிக்கிறார்கள்.  அதற்கு அய்யா வைகுந்தரையும் சாட்சியாக இழுக்கின்றனர்.
  • இந்து எனப்படும் இச்சான்றோர்களின் தெய்வங்களைப் பற்றி செய்திகள் ஒன்றுமில்லை.
  • களப்பணி ஏதும் இல்லை.  ஆவணங்களே அடிப்படை என்று கூறி இவர்களின் கருத்தையும் ஏற்றி சொல்லியுள்ளனர்
  • 1822 ல் ஆரம்பித்த இப்போராட்டம் 1849 வரை நீடித்தற்கான காரணத்தை வரி வசூலிப்பதில் பிரச்சனை,  மதப் பிரச்சனை என்ற நோக்கில் ஆவணங்களை தேடியுள்ளனர்.
  • 1921 ஆம் ஆண்டு நாடார் வங்கி ஆரம்பித்தவர்கள், 1937 ஆம் ஆண்டு வரை மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்குள் நுழைய முடியவில்லையே ஏன்? ஆசிரியர்கள் சொல்கிறார்கள் நாங்கள் கமுதி மீனாட்சி கோயிலுக்கு சென்று வந்தோம் என்று
ஆயினும்

உங்கள் கருத்தையும் என் விமர்சனத்தில் தவறிருப்பின் இங்கேயே சுட்டிக் காட்டும்படி வேண்டுகிறேன்.

புதன், அக்டோபர் 3

காதல் வளர்ந்த கதை


கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து
குறள் 1144  


அவளோடு பேசுவதாக
அவரவர் பேசினர்
அதுவே எங்கள்
அன்பை வளர்த்தது

ஊர்பேச்சே
ஊக்கமானது
உள்ளம் சேர
உபகாரமானது

அஃதில்லையேல்
அவள் அன்பு
அற்று போயிருக்கும் நானும்
இற்று போயிருப்பேன்

தேர்ந்தெடுங்கள்.........

ரஃபேலா போபர்ஸா அடிமைகளா 2 ஜியின் வாரிசுகளா தண்டகாரண்யா தூத்துக்குடி ஸ்டெர்லைட் கச்சத் தீவு காவேரி தண்ணீர் மாறிடுமோ - தங்க...