இடுகைகள்

சும்மா அதிருதில்ல

படம்
அந்த அறிவிப்பால்
சும்மாவாது
அதிர்ந்ததா?...

வாய் சவடாலில்
வந்துட்டேனு சொன்னதால்
வாசல் திறந்திடுமா

ஏமாற்றும் கூட்டத்தின்
எண்ணிக்கை கூடியதாக
இனம்காண் தமிழகமே

ஜகத்குரு, நித்தி
ஜக்கியின் ஆன்மீகத்தை
ஜனநாயகமாய் கண்டோம்

மரபுகளை மாற்றி
தியேட்டரில் கேசட் விற்றவன்
கேப்பையில் நெய் வடியுமென்கிறான்

எது சரி
எது தவறென
ஏதும் அறிவிக்காமல்

இறங்கி வந்த
இறை தூதனா?!!
எதை மாற்றுவான்

கோடிகளில் புரண்டு
கேமராமுன் வசனம் பேசி
நாடாள வருவேனேன்றால்

சன்னி லியோனை
சட்டமன்ற உறுப்பினராக்க
சான்றொப்பம் அளிப்பாயோ?

ஓடுற குதிரையென
நோட்டை புடுங்கினவன்
ஓட்டை கேட்கிறான்

ஏலமெடுத்த டிக்கட்டை
எவனும் வாங்காததால்
எறிந்தாயே குப்பைத் தொட்டியில்

மறக்காத வடுவது........
கறக்கலாமென நினைத்தால்
காலமாவது நீதான்

காவி காதல்

படம்
அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
அம்மண மாக்கப்பட்டார்கள்
அவர்கள் தலித்தென்பதால்

கண்களால் கனிவது
காதல் உணர்வு
அம் மனஉறவை
அச்சப்படுத்துதல் முறையோ


அயோத்தி இராமனின் 
அக்கினி பரிட்சையில்
அவளுக்கு கிடைத்தது
கற்புக்கரசி பட்டம்

யோகி ஆதியநாத்
காவி ஆட்சியில்
காதலை கருக்கி
காப்பது சாதியை

மதங் கொண்டவர்கள்
மனித உயிர் வதைக்க - நீ
வேடிக்கை பார்க்கவா
வினை ஆற்றவா

மதங்களுக்கு மரணமும்
சாதிகளுக்கு சமாதியும்
காதலால்தான் சாத்தியம் - ஆக
காதல் செய்வீர்

“தேச விரோதிகள்”

படம்
கால விரயத்தில் கருப்பு பணத்தை காயடிப்பதாக கூறியவன் கஷ்டப்படும் எங்களுகிட்ட பெயர்
பதினைந்து இலட்சம் ஐம்பது நாட்கள் அறுபத்தாறு பிணங்கள் அவர்கள் இட்ட பெயர்
“கேமன்” தீவுகள் “கேத்தன் தேசாய்கள்” பக்த கோடிகள் பாமரன் எங்கள் பெயர்
“ரிலையன்ஸ் பிரஷ்” “பிக் பஜார்”, “ஃபண்டலூன்” பாரத் மகான்கள் சில்லரை வணிகனின் பெயர்
“கார்பரேட்” மருத்துவமனைகள் சுயநிதி கல்லூரிகள் “ரியல்” எஸ்டேட் நல்லவர்கள் சவாலில் வைத்த பெயர்
இம் என்றால் சிறைவாசம் ஆம் என்றால் பக்தவிலாசம் “ஹே ராம்” என்றேன் ஆயினும் அவர்களிட்ட பெயர்
பாடுபட்டு உழைத்தது கருப்பாம் “பனாமா” என்றால் வெளுப்பாம் “P” நோட்டு பக்தன் எனக்கிட்ட பெயர்
ஆயிரம் ஐநூறு கருப்பா நூறும் ஐம்பதும் வெள்ளையா நூறு கேள்வி எழுப்ப நோகாமல் வழங்கப்பட்ட பெயர்

குலத் தொழில்

படம்
செம்படவனோ செம்மீன் மரைக்காயாரோ அல்ல எஸ் & எஸ், ஸ்ரீராம் அக்மார்க் அய்யர்கள் அயிரையை பிடிச்சு வித்தவங்க
கூறு 5 ரூபாவென்று கூவி வித்தவன் குப்பனோ, சுப்பனோ இல்லீங்க பனியாக்கள் ரிலையன்ஸ் பிரெஷ், பிக் பஜார் பியானி, அம்பானி
நாலுபேர் தலைமுடி வெட்டி நானூறு கோடி பொருளீட்ட நாவிதனோ நான் நேட்சுரல்ஸ், கீரின் ட்ரென்ட் கார்ப்ரேட் முதலைகள்
வெள்ளன எழுந்து வெளுத்து கொடுத்தவனை வண்ணாரென பெயரிட்டாய் பிக் லாண்ட்ரி, லாண்ட்ரி பாய் கடை திறந்தாயே நீ என்ன சாதி
சப்பாத்தி முள் தைக்காதிருக்க செருப்பு தந்தவனை சக்கிலி என்றாய் மாட்டுத் தோலை இறக்குமதி செய்து செருப்பு செய்யும் – நீ யார் வெட்கமின்றி சொல் சூத்திர பஞ்சமனின் வேலை சுகமா இருந்தா வா சாக்கடையை சுத்தம் செய்வோம் கோடிகள் கிடைக்காவிட்டாலும் குமட்டும் வாசனை பெறுவாய்
எனக்கோ எம்பெருமானின் கடாட்சம் கருவறைக் குள்ளிருந்தால் கிட்டுமென ஆகம விதிப்படி கற்றிருக்கிறேன் – ஆம் அடியேன் பூசாரியாக வேண்டும் அவனருளின்றி கோடிகள் வேண்டேன்
கிராம தேவதைகள் அரவணைத்து வளர்ந்தவனென்பதால் மதுரையம்பதியிலோ, காஞ்சியிலோ மயிலை கபாலியோ அல்ல அரங்கனோ அடியேனை ஏற்க வேண்டும்
காதல் செய்யும் காலம்

படம்
கார்காலம் கண்ணாளா   காதல் செய்யும் காலமடா கூதிர்காலம் மன்னவா   கூடிக் களிக்க வரமடா போர்கோலம் பஞ்சணையில்    புதியன தேடும் ஆர்வமா நீர்கோலம் கன்னத்தில்    நீயெனை பிரிய பாரமடா
பொருளீட்டும் பயணத்தில்    பொலிவி ழந்ததென் மேனியடா காரிருளில் புல்லினம்    கலகலக்க வேதனை பெருகுதடா ஏரிக்கரை பூங்காற்றும்    ஏகாந்தமும் உனையே நினைவூட்ட கோரிக்கை தலைவா    கோலமயில் எனைகாண திரும்பிவா
பொருளா புன்னகையா    பூவா தலையா வேண்டாமடா அருகாமை தானடா    ஆனந்த அன்பைச் சொல்லும் பருகாத இளமை    பஞ்சத்தில் பட்டினியால் மடியுமடா சருகான முதுமையில்    சதிராடுமோ சல்லாப காமமடா
கால்வயிற்று கூழானாலும்    கண்ணாளா இணைந்தே குடிப்போம் மேல்தட்டு வாழ்வானாலும்    மேன்மையுடன் இணைந்தே வாழ்வோம் யௌவனத்தில் பொருள்தேடி     ஏந்திழையை பிரிந்து செல்வாயோ கவனத்தில் கொள்ளடா     கட்டியவள் காத்திருப்பேன் இளமையல்ல
வளைகுடா நாடோ    வல்லரசு அமெரிக்க தேசமோ வைஃபை வசதியோ    ஸ்கைப்பில் பேசிப் பழகியோ வாழும் வாழ்வில்    வசந்தம் ஏதடா, கூறடா நாளும் ஊடிகூடி
   நடத்திடும் வாழ்வே மகிழ்ச்சியடா

நூறு ரூபாய்

படம்
மூன்று, பனிரெண்டு
முப்பது ரூபாய்க்கு
சந்தையில் கிடைக்கும்
சக்திக்கு ஏற்ப

லண்டன் பணம்
நாலு ரூபாய்க்கு கிடைக்கும்
லட்சாதிபதி பணம்
நாள் வட்டிக்கு கிடைக்கும்

அம்பானிக்கு ஆறு ரூபா
"ஐடி" காரனுக்கு பனிரெண்டு ரூபா
ஐயோ பாவம் பொதுஜனத்துக்கு
18-24 ன்னு ஆளப் பார்த்து விலை

ஓடாய் உழைக்குது பணம்
ஓரிடம் சேருதே தினம்
'உபரி' என்றார் மார்க்ஸ்
'விலை' என்றான் வியாபாரி

போங்காட்டம்

படம்
இது பாசாங்கா போங்காட்டமா தோழர்களுக்கே வெளிச்சம்
அவனோ இவனோ அடிப்பது கொள்ளைதானென வேட்டையிலிருப்பவனே வெடி போடுகிறான்
எல்லாம் தெரிந்த ஏமாளி மக்கள் ஏதோ கடமையென எண்ணாது போகின்றனர்
“நூற்றுக்கு நூறு” கள்ளத்தனமும் சேர்த்து கணக்கு காண்பிக்க கட்சிகளுக்கு ஆலோசனை
இது பெரியாரின் மண் பார்பனியமே எதிரி பரவாயில்லை அவர்
பலவீனமாயிருக்கையில் தாக்குவது அதர்மமென்றார் காந்தி அவ்வேதத்தை அடியொற்றி அவரை தாக்குவதில்லை
ஏழெட்டு கூட்டணி எப்போ மாறுமோ எல்லாமே லாவணி - அதுவே ஜனநாயகம் என்பாயோ நீ
புறகணிப்பை புறந்தள்ளு போங்காட்மென்று புதுக்கதை எழுது
தேர்தல் பாதை டாஸ்மாக் போதை போங்காட்டமாய் - அது புறமுதுகிட்ட காதை
புரட்சிக்கு வாய்தாவா மறுகாலணியாக்கம் மடை திறக்குமோ கழகம் தீர்மானிக்கும்
புரட்சி மலருமா மக்கள் அதிகாரம் மறுபடியும் சாக்கடைக்குள்ளே – அட
பாசாங்கு அல்ல இது