ஞாயிறு, நவம்பர் 13
பிரிவின் வலி
திங்கள் கடந்தது
திருமுகம் காட்டி
எங்கே மறைந்தாய்
எனையே வாட்டி
தங்க நிலவே
தமிழே என்றரற்றி
செங்களம் சென்றாயோ
செல்வியை ஏமாற்றி
நினைத்த வுடன்எழ
நிருமலன் அல்ல
நினைவற்றுப் போக
நிலைமாறு பவனல்ல
உனையன்றி உலகில்
உறவேது மில்லை
வினையாய் கேள்விகள்
வீண்பழியை மாற்றுமோ
அறிவேன் காதலை
ஆயினும் பிரிவில்
குறிப்பை உணர்த்த
குறிஞ்சி அரசனுக்கு
அறிந்த மொழியில்
அடுக்கி வைத்தேன்
சிறியவள் துயரை
சீராக்க வாரீர்
தளராதே தங்கமே
தனிமை விலகும்
இளம்பிறை வளரும்
இன்பங்கள் பெருகும்
அளவளாவ அன்பே
அவ்வலித் தீருமடி
வளமான வாழ்விற்கு
வழித்துணை நீயடி
புதன், நவம்பர் 2
தேன்தமிழ் சொல்லெடுத்துப் பாடவா
தேன்தமிழ் சொல்லெடுத்துப் பாடவா
தேவையை அதிலேச் சொல்லவா
வான்புகழ் வள்ளுவன் வழியே
வண்டமிழில் நின்புகழ் இசைக்கவா
ஏனென்றுக் கேள்வி கேட்காதே
என்னிணை நீயாக வேண்டவா
மான்போலத் துள்ளி மறையாதே
மச்சானின் மனம் மகிழாதே
ஆசையச் சொல்லி விட்டா
அச்சாரம் போட்ட தாகுமா
மீசைய முறுக்கிக் கேட்டா
மிதிலையின் ஜானகி ஆவேனோ
பேசிக் பழகிப் பார்க்கலாம்
போதிமர ஞானம் தேடலாம்
ராசியாகிப் போச்சு என்றால்
ரதிமதனா வாழ்வைத் தொடங்கலாம்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
பாரத் மாதா கீ ஜெய்
சிக்கந்தர் தர்கா தூணில் சிவனின் மகனுக்குத் தீபம் சி.ஐ.எஸ்.எப் சகிதம் சீக்கரம் கிளம்புங்கள் சுவாமி உளரல்கள் சட்டமாக ஊர் வேடிக்கை பார...
-
நீ என்னை சந்திக்கும் போதெல்லாம் இறகுகள் முளைத்து பறக்கிறேன் உன்னருகாமையில் - நான் உயிரோடிருப்பதை உணர்கிறேன் என்றென்றும் எனதானவன் நீ எனது ப...
-
வேண்டாம் என்பது வேதவாக் கல்ல வேள்வியைத் தொடர வேண்டுகோள் என்றே மோகன இராகத்தில் மௌனமாய் சுரங்களை ஆனந்த பைரவியாக்கி ஆவலைத் தூண்டினேன் ஏகாந்த வ...
-
அதிர்வில்லா முத்தத்தில் ஆனந்தம் ஏதடி எதிர்பாரா வேளையில் எத்தனைச் சுகமடி உதிரம் கொதிக்க உதடுகள் துடிக்க கதிகலங்கும் முத்தத்தை கண்ணே வழங்கட...
-
நண்பரொருவர் தான் எழுதியதை என் தளத்தில் பதியுமாறு வேண்டினார் அவரின் அவா இதோ........ படைத்தவனையே சாதியால் பிரித்து வைத்தார் ஆன்மீக அறிவின்ற...
-
சிக்கந்தர் தர்கா தூணில் சிவனின் மகனுக்குத் தீபம் சி.ஐ.எஸ்.எப் சகிதம் சீக்கரம் கிளம்புங்கள் சுவாமி உளரல்கள் சட்டமாக ஊர் வேடிக்கை பார...