செவ்வாய், ஜனவரி 20

என் கேள்விக்கென்ன பதில்

 













சிறந்த பதிலை
செப்புவதா வேண்டாமா
சிக்கலாகுமோ என
சிந்தித்துக் கொண்டிருக்க

தாமதமேன் தலைவா
தசைசால் மானுடா
தக்கதொரு பதிலுக்கா
தவிப்பதேன் மணிகணக்கா

கேள்வியா?! எனக்கா?!
கேள்வி கொள்ள
கேட்டது எனைதானென்றிட
கேடயத்தை தேடினேன்

பதற்றத்தை தூண்டியது
பாவையின் கேள்வி
பதிலேதும் உரைக்காது
பார்வையால் திரையிட்டு

நோக்கினேன் அவளை
நோக்கம் எதுவோயென
நோட்ட மிட்டேன்
நொந்து கொண்டேன்

உனக்கொரு பதில்
உடனே சொல்லிட
உள்ளம் நினைத்தாலும்
உச்சரிப்பில் பிழையானால்

புரிந்தது புரியாதது
புரளி, புரட்டு
புத்திக்கு எட்டவில்லை
புலம்பிக் கொண்டேன்

எனக்கான எலிப்பொறியோ?
ஏதேனும் உளருமுன்
எதற்கும் ஒருமுறை
என்ன கேள்வியென

பலமுறைச் சொல்லி
பலபதில் தேடி
பக்குமான பதிலெனில்
பாதக சாதகங்களை

சிருங்கார வார்த்தைகளில்
சிலாகித்து உரைத்திட
சிந்தித்து..... சிந்தித்து....
சிக்கினால் வழியோசித்து

சிறந்த பதிலை
செப்புவதா வேண்டாமா
சிக்கலாகுமோ என
சிந்தித்துக் கொண்டே ............

அ. வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

மாதவி

  கற்பின் இலக்கணம் கண்ணகி யெனில் காதற் கிழத்தி காப்பிய மாதவி?!! அரங்கேற்றம் கோவலன் அவர்கள்மகள் மணிமேகலை அத்துடன் துறவறம் அக்மார்க் இல்லையோ ...