கடவுள்—
நம்பிக்கையா?
அனுபவிக்கும்
அனுபவமா?
கண்மூடி
காலங்காலமாய்
சொன்னதை
கேள்வி
கேட்காமல் ஏற்பதா?
நேரடி
அனுபவமோ,
நிலைத்திருக்கும்
சாட்சிகளோ
இல்லாததா
கடவுள்?
ஆதாரம்
ஏதுமின்றி
அவதாரங்களைக்
கடவுளென்பது
ஆபத்தானது.
ஆதலால்
தேடுகிறேன்;
ஆங்காங்கு
அவரவர்
வசதிக்கேற்ப.
உருவமற்றோ,
உருவத்தோடோ
ஒரு
நம்பிக்கையுடன்
ஆராதிக்கின்றனர்.
பூமி
சூரியனைச்
சுற்றுவது
போல்
கோயிலைச்
சுற்றினால்,
இரவு பகல்
நிகழ்வது போல்
கடவுள்
உண்டு, இல்லையென
காரணம்
சொல்லலாமா?
கடவுள்
வந்துவிட்டால்,
கற்பித்த
நம்பிக்கைகளை
காணும்
அனுபவத்தைத் தந்தால்,
எக்குலத்தின்
பிரதிநிதியென
ஏடாகூடக்
கேள்வி தவிர்த்து,
H₂O
வியாபாரம்
செய்யலாமா
என்பேன்.
அ. வேல்முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக