சனி, ஜனவரி 2

உணர்வுகள்



அதுவொரு பூகம்பம்
ரிக்டர் அளவுகோலில்
7 புள்ளிகளா
8 புள்ளிகளா
என கணக்கிட

அது ஒரு சூறாவளி
என்ன பெயர் வைக்கலாம்
கடந்த புயலை காட்டிலும்
இதன் சேதாரம் அதிகம்

ஆயிரம் வாட்ஸ்
மின்சார விளக்கு
எரிந்து அணைய்
ஏற்பட்ட மாற்றம்

புல்லட் இரயில்
சூப்பர் சோனிக் விமானம்
இவைகள் நொடிகளில்
ஏற்படுத்தும் அதிர்வுகளை காட்டிலும்

ஆம்
எதைப் பற்றி
இத்தனை எண்ணங்கள்

கவிகள் சிலர்
சத்தம் என்றனர்
களிப்புற்ற நானோ
கண்களில் கன்னியிட்ட

முத்தத்தை இப்படி.................

திரளழகு

திரளழகை தீபவொளி திருத்தி எழுதிட முரணேது முந்தானை முகமன் கூறிட மரகதவுடல் மச்சானை மகிழ்ச்சியில் ஆழ்திட சரசங்கள் பயின்றிட சரணடை பேரழகே நின்னசைவ...