தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது. அதில் எது சரி எது தவறு என சீர் தூக்கி பார்ப்பது ஒவ்வொரு மனிதனின் கடமை. தவறுகளை செய்து விட்டு அது சரிதான் என ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து அதற்கு வக்காலத்து வாங்குவதால் தவறு சரியாகி விடுமா. அல்லது அதன் முன் எதிர் கருத்து வைப்பது அவர்களின் சுதந்திரத்தை பாதிப்பது ஆகுமா. எது சுதந்திரம்………..
பெரும்பான்மை மக்களுக்காக தன்னை அர்பணித்து கொண்ட தலைவர்களை கொச்சைபடுத்தி உவமானம் என்ற பெயரில் எழுதுவது அயோக்கியத்தனம். அது அதிகாரத்திலிருந்து கொண்டு அகிலத்தை ஆள்பவனாக இருந்தாலும் சரி அல்லது தன்னை பிரபலபடுத்தி கொள்ள கவிதை என்ற பெயரில் மக்கள் தலைவர்களை கொச்சைபடுத்தும் லீனா போன்றவர்கள் ஆனாலும் சரி கண்டிக்கப்பட வேண்டியவர்களே
மற்றவர்கள் ஒதுக்கி விட்டது நீயேன் தூக்கி பிடிக்கிறாய், அது அவள் சுதந்திரம் அதில் தலையிட நீ யார் என்பது அடி முட்டாள்தனம். சொரணையுள்ள எந்த மனிதனும் இதை தட்டி கேட்டே ஆக வேண்டும். அதுதான் சமூக அக்கறை.
உலகின் அழகிய முதல் பெண் என தற்பெருமை கொள்ள யாருக்கும் தடையில்லை. ஆனால் பாலியல் கவிதை ஏழுத மார்க்சிய ஆசான்கள் பெயர் என்றால் தடைதான். ஆனால் யுவகிருஷ்ணா சொல்வது போல் திராவிட தலைவர்கள் உவமானப் படுத்தி எழுதியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? என கவலைபடுகிறார். பிழைப்புவாதி அப்படி செய்ய மாட்டார்.
ஆனால் அவர்கள் அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என்றனர் அல்லது முற்றும் துறந்த முனிவன் இல்லை என்றனர். அதைதான் விமர்சனம் செய்ய வேண்டும்..
எதிர்ப்பை தெரிவிக்க வந்தேன். அதுதான் நோக்கம் அதற்காக 25 பேர் பேசியவுடன் கடைசியாக பேசு என்பதும், அகிம்சையுடன் இரு என்பதும் யாரை ஏமாற்ற. 9 மணிக்குள் இவர்கள் பேசி கலைந்தவுடன் எதிர்ப்பை பதிவு செய்ய வந்தவர்கள் மவுனமாக கலைய வேண்டும்.
முருகபக்தர் உண்மைதமிழனுக்கு ஏது அராஜகம் என்பதில் தடுமாற்றம், அடிக்க ஓடி வரும் பாலியல் கவிஞர் நல்லவர், தட்டி கேட்டவர் அராஜாகவாதி, அப்பனுக்கு பாடம் சுப்பனோ அல்லது அவனது அப்பனோ எப்படி பிறந்தான் என மறந்து விட்டேன் அதனால் உண்மைதமிழனை வம்புக்கு இழுத்து விட்டேன். யாருக்கு யார் ஆதரவு என்பது அறுபடை முருகா உனது பிறப்பை அறிந்த உண்மை தமிழன் லீனாவுக்கு ஆதரவுளிக்கும் போதே தெரிகிறது.
தியாகு என்றொரு தோழர் இப்படி சொரிந்துகொள்கிறார்
1.லீனாவின் கருத்து ஏற்றதக்கதில்லை ஆனால் அவர் அதை வெளியிடும்
உரிமை இருக்கிறது அவருக்கு
2.கவிதைகள் அனுபவத்தில் இருந்து பிறக்கவேண்டும் என்பதில்லை
3.வீட்டுக்கு போய் மிரட்டினால் வீட்டுக்கு வருபவனின் கையை
உடைக்க அதிக நேரமாகாது என் வீட்டு வந்தால் அதைத்தான் செய்வேன்
ஏற்கமுடியாத ஒன்றை சகித்துகொள்ளும் மனபக்குவம் தியாகு போன்றோருக்கு வேண்டுமானால் இருக்கலாம் ஆனால் எதிர்க்கும் உரிமை வினவு போன்று அனைவருக்கும் உண்டு,
புணர்தலை கவிதையாக வடித்து காசு பார்த்துக்கொள்ள சொல் லீனாவை, தியாகு வேண்டுமானால் லீனாவிடம் பதிப்பக உரிமை பெற்று புகழை மேலும் பரப்பட்டும். எதற்கு மார்க்சிய ஆசான்களின் பெயரை பயன்படுத்த வேண்டும். மார்க்சிய ஆசான்களின் பெயர்தான் பொருத்தமானது என எந்த அனுபவம் கற்பித்தது அவருக்கு,
காலிகளை அவர்களின் கோட்டையில் சந்திப்பதற்கு ஒரு மனதைர்யம் வேண்டும். அது எல்லோருக்கும் வந்து விடாது,
ரோசாவசந்த் என்றொருவர், தமாஷ், வெட்டிவேலை என்று தனது வலையில் பக்கம் பக்கமாக வக்காலத்து வாங்கி வெட்டிவேலை செய்து கொண்டிருக்கிறார்.
எப்படியோ, அம்மணி லீனா வலைதளத்தில் தனது ஆதரவாளர்களை அதிகரித்து கொண்டார்,