வெள்ளி, மே 25

காக்க முடியாதவன் கடவுள்

ஆரணியில்
ஆரம்பித்தது
அரகரனின்
அச்சு முறி 
   விளையாட்டு


ஆட்டத்தில்
அரங்கனும்
அங்கம் வகிக்க
அடுத்து சூடு பிடித்தது


அரகரனும்
அரங்கனும் ஆடிட
அகப்பட்டவன்
அய்யகோ........ பக்தகோடி


சித்திரை விழாவில்
சித்திரகுப்தன் 
பார்த்த கணக்கு (கூடுதலாய்)
பதினாறு 
   மே 10 வரை


அச்சு முறிந்து
அவன் காலடியிலே
சிவலோக பதவி


மிச்சம் 
மின்சாரம் தாக்கி
மீளா துயில்


காக்க முடியாதவன்
கடவுள்
மீட்க முடியாதவன்
மீட்பர்


பட்டாலும் திருந்தாதவன்
முட்டாள்
இருந்தாலும் வணங்குபவன்
??????????????????8 கருத்துகள்:

Senthil சொன்னது…

கடவுளின் காலினால் மரணம் என்றால் அதுதான் நான் செய்த புண்யித்தினுல் மாபெறும் புண்ணியம். கடவுள் என்னுள், என் மூச்சினுள் இருப்பவர் என் மூச்சை நிறுத்த என்னினால் எவனால்தான்(எமனால்தான்) அதை தடுத்து நிறுத்த முடியும். எல்லாம் அவன் செயல்.

அ. வேல்முருகன் சொன்னது…

சங்கரராமனை சங்ராச்சாரி ஆள் வைத்து கொன்றது போல் அனைவரையும் கொல்ல வேண்டும் என எண்ணமா செந்தில்

மாலதி சொன்னது…

தலை சாய்த்து வணகுகிறேன் அறிவார்ந்த உமது ஆக்கத்திற்கு ஆரணியில் மட்டுமல்ல அடுத்தடுத்து குடியாத்தம் ... தொடக்கி இதே கதை தொடர்ந்து முட்டாள் தனங்கள் தொடரத்தான் செய்கிறது பாராட்டுகள் ....

Senthil சொன்னது…

அரங்கன் திருநாமம் தரித்தவன்
அரகரன் திருநீறு தரித்தவன்
வைஷ்ணவன் என்றும் சைவன் என்றும்
பிரத்து பாராமல் அனைவருக்கும் ஒரே விதி
என்று இந்த நிகழ்ச்சி தெளிவுபடுத்துகிறது.
ஆனால் நீங்கள் எழுப்பும் வினாவிற்கு யாராலும் பதில் சொல்ல முடியாது. வேண்டுமானால் அந்த பரமனையும் பார்கடல் வேந்தனையும் கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன் உங்கள் கேள்விக்கு விடைகிடைக்க.

நீங்கள் எழுப்பும் கருத்தை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் எங்கள் உடலில் ஊரிப்போன பக்தி மார்க்கமானது தாய்ப்பால் ஊட்டிய காலத்திலிருந்தே வந்திருப்பதால் என்னால் அதிலிருந்து உடனடியாக வெளிவந்து அதற்கு மாறான கருத்தை தெரிவிக்க தைரியம் கிடையாது. நீங்கள் கூறிய கூற்றில் உள்ளது உண்மை என்று தெரிந்தும் நாங்கள் கூறப்போவது ஒன்றே ஒன்றுதான்.

ஓம் நமோ நவசிவாய
ஓம் நமோ நாராயானயா நமஹ

எல்லாம் அவன் செயல்.

Senthil சொன்னது…

சிவபெருமானின் செயல்கள் யாவை?

படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் ஆகிய முக்கிய மூன்று தொழில்கலை சிவபெருமான் செம்மையாக ஆற்றுகிறார்.

நான் 10 ம் வகுப்பில் தமிழ் பாடத்தில் படித்ததில் ஞாபகத்தில் இருந்நது.

Where there is imbalance there is an action that will balance the imbalance. In economy there is inflation and deflation, in human life there is live and death, between these two situation there is a perfect life.

According to the imbalance % the Govt. and the God doing their duty, it may harmful to few but it is benefit to the society in general.

அ. வேல்முருகன் சொன்னது…

முப்பதுகளில் பாரதி 30 கோடி முகமுடையாள் என்று மக்கள் தொகை கணக்கை கூறினான் இன்று 120 கோடி தாண்டி மக்கள் தொகை. தாங்கள் கூறும் imbalance விதி படி பார்த்தால் 30 கோடி மட்டும்தான் இருக்க வேண்டும் 120, 140 கோடி அதிகரித்து கொண்டு போவதேன்? செந்தில்

சி.கருணாகரசு சொன்னது…

அச்சு முறியா கவிதை.... சிறப்பு.

Sasi Kala சொன்னது…

ஆரணியில் மட்டுமல்ல அவனியில் பல இடங்களிலும் தொடரும் நிகழ்வுகள் .
சிந்திக்க மறுத்த மக்கள்.

துடைப்பக் கட்டைகள்

வாரான் வாரான் பூச்சாண்டி   வாரணாசி கோட்டை தாண்டி தெருவ கூட்டிக் காட்டுறான்டி     திமிருதானே தினமும் செய்வானா  எருமை சாணம் பொறுக...