சனி, செப்டம்பர் 14

மாற்று தீர்ப்பு எழுதுங்கள்

ஒன்றோடு
ஐந்தென்றால்
முறையாகுமா?

கன்றோடு
காளையென்றால்
நன்றாகுமா?

எட்டும்
நாற்பதும்
இணையாகுமா?

ஏமனில்
எட்டில் திருமணமாகி
எமனை கண்டாள்

இருபதில்
இந்திய தலைநகரில்
இல்லாமல் போனாள்

அகிலமெங்கும்
அவதிபடுவது
பெண்தான்

காமம்
கரு உருவாக
கருவறுக்கல்ல

மிருகமாய் புணர
மனித உயிரதெற்கு
மரித்து போகட்டுமே

மதமா
மழழையை
மணப்பெண்ணாக்கியது

மானுடமே
மழழையை, மாதை
மாற்றி பார்க்குது

மரண தண்டனை
மாற்றம் தருமோ
மனித சமுகத்திலே

நேற்று இன்றென
நெடுங்கதையாய்
தொடர்வதால்

மாற்றி சிந்திப்போம்
வெட்டி விடுவோம்
வேண்டாத உறுப்பை

ஆம்
காயடிப்பது
மிருகத்திற்குதான்
4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

செம...

cheena (சீனா) சொன்னது…

அன்பின் வேல் முருகன் - அருமை அருமை சிந்தனை - கவிதை அருமை

// காயடிப்பது
மிருகத்திற்குதான் //

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

Nandakumar Durai சொன்னது…

nethiyadi.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நியாயமான கோபம் ஐயா. தண்டனை சரிதான்.

காவி காதல்

அண்ணலும் நோக்கினான் அவளும்  நோக்கினாள் அம்மண மாக்கப்பட்டார்கள் அவர்கள் தலித்தென்பதால் கண்களால் கனிவது காதல் உணர்வு அம் மனஉறவ...