சனி, ஆகஸ்ட் 27

குலத் தொழில்



செம்படவனோ
செம்மீன்
மரைக்காயாரோ அல்ல
எஸ் & எஸ், ஸ்ரீராம்
அக்மார்க் அய்யர்கள்
அயிரையைப் பிடிச்சு வித்தவங்க

கூறு 5 ரூபாவென்று
கூவி வித்தவன்
குப்பனோ, சுப்பனோ இல்லீங்க
பனியாக்கள்
ரிலையன்ஸ் பிரெஷ், பிக் பஜார்
பியானி, அம்பானி

நாலுபேர் தலைமுடி வெட்டி
நானூறுக் கோடிப் பொருளீட்ட
நாவிதனோ நான்
நேட்சுரல்ஸ், கீரின் ட்ரென்ட்
கார்ப்ரேட் முதலைகள்

வெள்ளன எழுந்து
வெளுத்துக் கொடுத்தவனை
வண்ணாரெனப் பெயரிட்டாய்
பிக் லாண்ட்ரி, லாண்ட்ரி பாய்
கடைத் திறந்தாயே
நீ என்ன சாதி

சப்பாத்தி முள் தைக்காதிருக்க
செருப்புத் தந்தவனை
சக்கிலி என்றாய்
மாட்டுத் தோலை இறக்குமதிச் செய்து
செருப்பு செய்யும் – நீ யார்
வெட்கமின்றிச் சொல்
  
சூத்திர பஞ்சமனின் வேலை
சுகமா இருந்தா வா
சாக்கடையைச் சுத்தம் செய்வோம்
கோடிகள் கிடைக்காவிட்டாலும்
குமட்டும் வாசனைப் பெறுவாய்

எனக்கோ எம்பெருமானின் கடாட்சம்
கருவறைக் குள்ளிருந்தால் கிட்டுமென
ஆகம விதிப்படிக் கற்றிருக்கிறேன் – ஆம்
அடியேன் பூசாரியாக வேண்டும்
அவனருளின்றிக் கோடிகள் வேண்டேன்

கிராமத் தேவதைகள்
அரவணைத்து வளர்ந்தவனென்பதால்
மதுரையம்பதியிலோ, காஞ்சியிலோ
மயிலைக் கபாலியோ அல்ல
அரங்கனோ அடியேனை ஏற்க வேண்டும்





3 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நன்று சொன்னீர் நண்பரே

Senthil சொன்னது…

அய்யா, இன்றைய காலகட்டத்தில் அனைவரும் அவரவர் குலத்தொழிலை மறந்து வலுக்கட்டாயமாக வேறுதொழிலை செய்துவருகிறோம். கார்ப்பரேட் முதலாலிகள் நமது குலத்தொழில்களை startup என்கிற போர்வையில் அரசாங்கத்திடம் வரிச்சலுகைகள் பெற்று ஏதோ புதிய தொழிலை கண்டுபித்துவிட்டதாக பீட்றிக்கொள்கிறார்கள்.

உங்களுடைய இந்த பதிவு அருமை.

தொடர்க உமது புலமை.

தருமி சொன்னது…

சூத்திர பஞ்சமனின் வேலை
சுகமா இருந்தா வா
சாக்கடையை சுத்தம் செய்வோம்

!!!!!!

மேல்பாதி திரௌபதி

ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...