செவ்வாய், மார்ச் 30

தேரா மன்னர்களே

 


 



எரியும் கொள்ளியில்
எதுச் சிறந்ததென
ஏமாளிகள்
எடுத்தியம்பப் போகிறார்கள்

உரிமை உனக்கிருப்பதாக
உத்தமர் காலந்தொட்டு
உசுப்பேற்றிக்
குளிர் காய்கிறார்கள்

தேர்தல் பாதை
திருடர் பாதை என்றவர்கள்
திருத்திக் கொண்டார்களாம்
தேவை கருதி

போலி கம்யூனிஸ்ட்டுகள்....
அஃமார்க் ஆகிவிட்டதாகவும்
அன்று விமர்சித்ததற்கு - இன்று
சுய விமர்சனமேற்கிறார்கள்

”தேரா மன்னர்”களே
தேர்ந்தெடுவத்தவனை
திருப்பி அழைக்கவியலா – இத்
தேர்தல் ஜனநாயகமா?

ஒட்டுப் போடாதே
புரட்சிச் செய் என்றவர்கள்
ஊமையாகிப் போனார்கள்
ஒப்புக்குக் கதை கட்டுகிறார்கள்

அணிகள் இரண்டாய்
அவரவர் வசதிக்கேற்ப
லாவணிப் பாடுகின்றனர்
ரசிப்பதற்குக்  கூடுதலாய் ஒன்று

நிபந்தனையற்ற ஆதரவு
தேவையானச் செல்வாக்கு
புதிய ஜனநாயகப் புரட்சிக்கு
திரட்ட இயலாததால்

முப்பதாண்டுகள்
கட்டி எழுப்பிய
மக்கள் திரள் அமைப்புகளை
மடை மாற்றிய மருதையன்

அரசியலமைப்பை மாற்ற
ஆய்த்தமானவர்கள் - மக்களை
நிற்கதியாய் விட்டுவிட்டு - தரகு
முதலாளிக்கு ஓட்டு கேட்கிறார்கள்

லீனா மணிமேகலை போல்
மார்க்சியத்திற்கு வியக்கானம்
தேர்தல் பங்கெடுப்பும் – 2 ம் உலக
போரும் உதாரணங்களாயின

தேமுதிக, நாம் தமிழர்
மறுமலர்ச்சி, மய்யம்
மாற்றத்தை தேடிய பாமக
காலி பெருங்காய டாப்பாக்களாயின

பெட்ரோல் டீசலுக்கு
மதிப்புக் கூட்டு வரி - மற்றவைக்கு
சரக்குச் சேவை வரி
…..ஒற்றைத் தேசியமாம்

இற்றை நாளில்
இதுபற்றி பேசிட
இந்திய எதிரியாவாய் – தமிழனாய்
தனித்து விடப்படுவாய்

பலமடங்கு ஏறிய
விலைவாசியை
பத்தாண்டு ஆட்சியில் இல்லாதவன்
பட்டென்று குறைப்பானா

“நோட்டா” ஜெயித்தால்
நாயகன் யாரென
சட்டமியற்றிய
நாடும், சனமும் அறியாது

ஆயிரமோ
ஆயிரத்து ஐந்நூறோ
ஆருடைய பணமென
அறியாதவனா நீ

ஆகட்டும்
அதை வாங்க
அற்புத சனநாயகத்தைக் காக்க
ஓட்டுப் போடு


கருத்துகள் இல்லை:

தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...