செவ்வாய், அக்டோபர் 17
காமம்
கடக்க முடியாததா
கரையற்ற பால்வெளியா
அடக்க முடியாததா
ஆசையின் அளவற்றதா
தொடங்கிடத் தொடருமோ
தொடராதெனில் மாளுமோ
முடக்குமோ முனிவனையும்
முதுமொழி கற்றோரையும்
விருந்தாய் கொண்டால்
விளையும் அன்பு
விருந்தே கதியெனில்
விளையும் துன்பம்
விருந்தெனும் நினைப்பே
விரக்தியில் தள்ளுது
மருந்தென நினைத்தாலும்
மனதைக் குழப்புது
இக்கணமே வேண்டும்
இல்லையேல் என்போரே
சிக்கலில் சிக்குவர்
சிற்றின்ப பாதையில்
சொக்கும் காமம்
சுகமான விருந்தென்று
பக்குவ மடைந்தோர்
பட்டறிவில் தெளிவர்
நினைக்கும் மனதை
நிறுத்திப் பாரு
அனைத்தும் விளங்க
அறிவைக் கேளு
புனைந்த இன்பதுன்பம்
புத்தி உரைப்பதே
எனவே காமம்
இழிவல்ல இனிதுமல்ல
விருந்தின் விளைவோ
விரைவில் முடிவுறும்
அருந்திய சுகங்கள்
அன்றோடு மறையும்
கருத்தாய் உரைப்பேன்
காமம் கட்டுப்பட்டதே
இருப்பினும் மறுப்பேன்
இடறிய சிலருக்கே
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி
ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி எண்பதாண்டு கடந்தாலும் எட்டாக் கனியா கற்றலின் கடவுளும் நீட்டைத் தடுக்காதோ ஐஐஎம், ஐஐடி அயலாகி வாராதோ...
-
அவர்கள் எங்க வீட்டை குண்டுகளால் அழித்து விட்டார்கள் புழுதிப் படிந்த உடலோடு குருதி வழிய புலம்பிச் செல்பவள் அயலகத்து குழந்தை யென்று தியானத்தி...
-
ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...
-
யாரோ யாருடையப் பணத்தையோ திருடிக் கொண்டிருக்கிறார்கள் பதினாறு இலட்சம் கோடி பங்குச் சந்தையில் காணவில்லையாம் பதறாமல் விற்பனை தொடருகிறது கொண்ட...
-
ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி எண்பதாண்டு கடந்தாலும் எட்டாக் கனியா கற்றலின் கடவுளும் நீட்டைத் தடுக்காதோ ஐஐஎம், ஐஐடி அயலாகி வாராதோ...
-
க ன்னியின் வேண்டுதல் காளையால் கைகூடுமோ க ச ந்த காதல் காக்க வழிகாட்டுமோ கண் ட வுடன் அழைத்து காதலி கைப்பற்றுமோ கலந் த மனங்கள் களிப்புற்று வ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக