அன்பை வெளிப்படுத்த
அனுமதிக்கப்
பட்ட – ஓர்
அனிச்சை செயல்
முத்தம் கொடுப்பதே
அங்கீகாரத்திற்குப்
பின்
அவளிடம் அவனோ
அவனிடம் அவளோ
அனுமதிக் கேட்பதில்லை
ஆசையைச் சொல்ல
அதன் போக்கில்
அழுத்தமாய்
பதிப்பது
அந்த முத்தம்
கோபத்தின்
உச்சியில்
கொண்டவன் குளிர
கொடுத்தாலும்
மறுத்து
கோளாறு செய்பவன்
கொஞ்சி மகிழ்ந்து
கொஞ்சம் விலகினாலும்
கொசுறு கேட்டு
கொட்டமடிப்பது
முத்தத்திற்கே
கடுந்தவ மிருந்தாலும்
காத்திரு என்றே
கவனித் திருப்பாள்
காய்ச்சல்
உச்சமாகிட
காரண மாயாமல்
கனப்பொழுதும்
கடத்தாமல்
காற்றும் புகுந்திடாமல்
கடையேழு வள்ளலாவர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக