ஞாயிறு, நவம்பர் 1

வந்தேறிகளின் நாட்டில்







வந்தேறிகளின் நாட்டில்
வந்ததொரு தேர்தல்
வாக்கு சேகரிக்க
வரிந்து கட்டின கட்சிகள்

பாரதத்தில் பார்க்காததையா
பலமிழந்த அமெரிக்காவின்
பாராளுமன்றத் தேர்தல் - நம்மை
பரவசப்படுத்தப் போகிறது

ஆட்சிக் கட்டில்
ஆட்டம் காணுமென்பதால்
ஆரவாரப் பொய்களை
அள்ளித் தெளித்தது ஆளும் கட்சி

கொள்ளை அடிப்பதையும்
காப்பீடு மறுப்பதையும்
எல்லையில்லா விலையேற்றத்தையும்
எடுத்தோதியது எதிர்க்கட்சி

அம்பலப்பட்ட ஆதங்கத்தில்
அரபுகளின் கூட்டாளி
அவனொரு தீவிரவாதி - என்று
அப்துல் எல் சையதுக்கு வசவுகள்

அமெரிக்கர்கள் அமெரிக்காவை
ஆள வேண்டும்
அரபு ஆப்பிரிக்கர்கள் – ஆள
ஆசைப்படக் கூடாதென்றனர்

தீவிரவாதிகளுடன் தொடர்பு
ஜிகாதிகளுக்கு ஆதரவு
அயலவன் ஆளுவதோ
ஐயோ, அய்யய்யோ என்றனர்

தேசபக்தி கொண்டவர்கள்
தேர்தல் காலங்களில்
முஸ்லிம்களை வெறுக்க
மக்களுக்குக் கற்பித்தனர்

எல்லையற்ற அதிகாரத்தால்
ஏகாதிபத்தியக் கனவுகளோடு
ஏவுகணைப் போரில்
ஏகப்பட்ட இலாபமிட்ட

அரசியலமைப்புச் சட்டம்
அதிகார மையத்தின்
ஆசைக்கு வளைந்து
ஆபத்தை உணர்த்திட

ஆங்குள்ளவர் மட்டுமல்ல
அவர்களின் நேச நாடுகளும்
அதிபரின் வரிவிதிப்புக்கு
அஞ்சி நடுங்கினர்

பெட்ரோல் டீசல் விலைகள்
போரின் விளைவுகள்
பொதுமக்களின் பற்றாக்குறைகள்
போடும் ஓட்டால் மாறுமா?

மாறாது என்பதை
மாமாங்கமா அறிந்திருந்தாலும்
மக்கள் ஜனநாயகத்தை
மாற்றி அமைப்பார்களா

நானூறாண்டு வரலாற்றில்
அடிமைகள் எழுப்பிய
அமெரிக்க தேசம்
அவர்களுக்குமானது தானே

அ. வேல்முருகன்  

வந்தேறிகளின் நாட்டில்

வந்தேறிகளின் நாட்டில் வந்ததொரு தேர்தல் வாக்கு சேகரிக்க வரிந்து கட்டின கட்சிகள் பாரதத்தில் பார்க்காததையா பலமிழந்த அமெரிக்காவின் பாராளுமன்றத்...