திங்கள், மே 31

இராகுவுக்கு இராகுகாலம்

ஐம்பூதங்களின்
ஒரு பூதத்தின் வாசல்
இடிந்து வீழ்ந்தது

வல்லமை மிக்க
வாயு பகவானின்
வாசஸ்தலம்
மண் மேடாகியது

லைலா புயலை
நாட்டில் விட்டு
நடுங்க வைத்தவன்
வீட்டையே இழந்தான்

அகிலாண்டேஸ்வரனால்
அவன் வாசலையே
காக்க முடியவில்லை

ஆம்
இராகுவுக்கு
இராகுகாலம்

இராகு கேது
தோஷம் கழித்தவர்கள்
சிவனையே கழிக்க வேண்டிய நேரமிது

கிரகண தோஷம்
இராகு தோஷம்
இன்னபிற பாவங்கள்
இறங்கியதால் இடிந்தது
ஆத்திக வாதம்

அய்னூறாண்டு
ஆக்கியது களிமண்
ஆலம் வேர்கள்
அறிவியல் சொல்லும்
அடிசாய்ந்த காரணங்கள்




1 கருத்து:

அ.முத்து பிரகாஷ் சொன்னது…

மிக மிக அருமை தோழரே....

// இராகு கேது
தோஷம் கழித்தவர்கள்
சிவனையே கழிக்க வேண்டிய நேரமிது //

செவி உள்ளவர்கள் கேட்கக் கடவது ....

வருகிறேன் தோழர் ....

மும்மொழிக் கல்வி

மும்மொழிக் கல்வி மூத்தக்குடி தமிழனுக்காம் முட்டாள்கள் முகாரி பாடுகிறார்கள் ஏட்டுக் கல்வி இந்தி பேசுபவர்களுக்கு இரண்டா? ஒன்றா? கேட்பது யார்? ...