செவ்வாய், டிசம்பர் 6

பொது மக்களே உங்களுக்காக அம்பானி மன்னிக்கப்படுகிறார்

நாட்டின் மிகப் பெரிய தொழிலதிபர் அம்பானி, அரசுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.  அதை முன்னிட்டு Reliance Industries Limited எனும் நிறுவனத்தின் மீது எடுக்கப்படவிருந்த சட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு நிறுத்தி வைக்கிறது.

காரணம்

வழக்குகளால் கால விரயம் ஏற்படும், மேலும் நீண்ட நாட்கள் இதற்கு ஏற்படும். மேலும் முதலீட்டாளர்கள் பாதிக்கபடுவார்கள்.  ஆம் எந்தவொரு வழக்கும் மேற்படி நிறுவனத்தின் சந்தை மதிப்பை பாதிக்கும்.  அப்பாதிப்பு சிறு முதலீட்டார்களான பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள்.  ஆம் அவர்கள் ரிலையன்ஸில் முதலீடு செய்த பணம் காணாமல் போய் விடும்.  எனவே நடவடிக்கை கைவிடப்பட்டு வேறு நிவாரணங்கள் பரிசீலிக்கப்படுகிறது.


எதற்காக

கோதவரி படுகையில் அதாவது KG-D6 என்னுமிடத்தில் குறிப்பிட்ட அளவு இயற்கை எரிவாயு எடுத்து விற்பனை செய்ய ரிலையன்ஸ் நிறுவனத்திற்அரசு அனுமதி வழங்கியுள்ளது.  ஆனால் அந் நிறுவனம் அவ்வாறு நடந்து கொள்ள வில்லை.  குறைவாகவே உற்பத்தி செய்து நட்ட கணக்கு எழுதியுள்ளது.    இதனால் ஏற்பட்ட நட்டதிற்கு அபராதத் தொகை வசூலிக்க கடிதம் அனுப்பபடுகிறது.  அதற்கு பதில் அளித்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடிதத்தால் நடவடிக்கைகள் நிறுத்தப்படுகின்றன.


இதே விஷயம் தொடர்பாக அண்ணன் தம்பிகள் இருவரும் சண்டையிட்டு கொள்ள உச்ச நீதி மற்றம் தலையிட்டு தீர்த்து வைத்தது ஞாபகம் இருக்கலாம்.  


இந்த திட்டத்திற்கு  ஏற்கனவே ஏறக்குறைய ரூ.9000 கோடி செலவிட்டுள்ளதாக கணக்கெழுதி வைத்துள்ளது ரிலையன்ஸ்.   2 மில்லியன் வாயு எடுக்க வேண்டிய இடத்தில் 1 மில்லியன்தான் எடுக்கிறார்கள்.  ஆனால் செலவு..............


2000 ஆம் ஆண்டில் லைசென்சு பெற்ற ரிலையன்ஸ் இன்னும் லாபம் எதுவும் அரசு செலுத்தவில்லை.   அரசு இன்றுதான் நட்ட கணக்கு பார்க்க ஆரம்பித்திருக்கிறது.  ஏன் தெரியுமா கள்ள கணக்கு.  முதலீட்டில் ஒரு பகுதி எடுக்கும் வரை அரசுக்கு எவ்வித லாபத் தொகையும் செலுத்த தேவையில்லை என்பது ஒரு விதி.


இந்த துரப்பன பணிக்காக பல்வேறு சலுகைகள் பெற்ற ரிலையன்ஸ் நிறுவனம் இப்போதும் சலுகை பெற்றுள்ளது


ஆம் மக்களே உங்கள் பெயரால்

4 கருத்துகள்:

அன்புடன் நான் சொன்னது…

அரசும் அம்பானிகுடும்பமும் வேறுவேறு அல்ல.... அவனுக்கு தொழிலில் கொட்டணும்.... பதிலுக்கு தேர்தலுக்கு தேர்தல் இவன் கொட்டுவான்....

SURYAJEEVA சொன்னது…

வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டிய வேலையே ஊடகங்களை செய்ய வேண்டும்... அதை நாம் செய்து கொண்டிருக்கிறோம்

மாலதி சொன்னது…

மிகவும் சிறப்பான வெளிவர வேண்டிய செய்தியை பதிவு செய்து இருக்கிறீர்கள் இப்படித்தான் அரசு நிருவனங்ககள் தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுக்கிறது மக்கள் விழிப்பு பெற வேண்டும் ....

பெயரில்லா சொன்னது…

Indian people are slaves. They salute the people who look like mitta miraasu. The people don't know who is qualified and who is not qualified. So the country will be taken over by some rich Guy

மேல்பாதி திரௌபதி

ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...