புதன், டிசம்பர் 28

பாரமவுண்ட் விமான நிறுவனம் - கடன் நிலுவை


பாரமவுண்ட் ஏர்வேஸ் என்ற விமான நிறுவனம் பொதுத் துறை வங்கிகளிடம் பெற்ற கடன் விவரம் மேலே இணைக்கப்பட்டுள்ளது.  இதன் படி ரூ.437 கோடி கடன் பெற்றுள்ளதாக தெரிகிறது.   ஆனால் உண்மையில் வங்கிகளுக்கு ரூ.2000 கோடி செலுத்த வேண்டியிருப்பதாக சொல்லப்படுகிறது,

இதைவிட இன்னொரு கொடுமை என்னவென்றால்,  மேற்கண்ட இக்கடன்களுக்கு எந்தவித ஈட்டுறுதியும் அதாவது எந்தவிதமான அசையா சொத்தும் கடனுக்கு ஈடாக கொடுக்காமல் பெற்றுள்ளது.

கல்வி கடன் ரூ.10 லட்சம் வேண்டுமென்றால் 1008 விதிகள், கண்டிப்பாக அசையா சொத்து ஈட்டுறுதி வேண்டுமென்று கேட்கும் வங்கிகள் எப்படி இக்கடனை வழங்கியது.

ஓ அதனால்தான் இந்த முறைகேடை விசாரிக்க அனைத்து வங்கிகளும் சி.பி,ஐ விசாரிக்க பரிந்துரைத்து விட்டு அமைதியாக இருக்கின்றன. சி.பி.ஐ.  விசாரித்து ஏதாவது பணம் வசூல் ஆகியுள்ளதா சொல்லுங்கள் மக்களே

1 கருத்து:

மாலதி சொன்னது…

இந்த அரசுகள் எதோ மக்கள்க்காக இருக்கிறது என எண்ணிவிட்டு இருக்கிறீர்கள் இல்லை இது பெரு முதலாளிகளை வாழவைக்கும் அரசு. ஏழைகளை வீழ வைக்கும் . பாமரர்களை வாழவைக்கும் அரசுகள்என நாம்தான் தவறாக புரிந்து கொண்டு இருக்கிறோம் .

துடைப்பக் கட்டைகள்

வாரான் வாரான் பூச்சாண்டி   வாரணாசி கோட்டை தாண்டி தெருவ கூட்டிக் காட்டுறான்டி     திமிருதானே தினமும் செய்வானா  எருமை சாணம் பொறுக...