செவ்வாய், டிசம்பர் 4

கன்னி மேரி


கன்னி மேரியானாள்
கட்டிய மனைவி
கலங்கிதான் போனான்
கைப்பிடித்தவன்

பரிசுத்த ஆவியோ - எந்த
பாவியின் கழிவோ
பாரம் சுமக்கிறாள்
பத்தினியானவள்

காரணங்கள் எதுவாயினும்
கழுவி விட
மார்க்கம் இருப்பதால்
மரித்து போனதொரு மார்க்கம்

படுக்கை
படுப்பதற்கு மட்டுமல்ல
பத்தினியை
பரவசப் படுத்தவும்

அருகிருந்தும்
அனாதையானால்
அரவணைக்க
அடுத்தவனை நாடதான் வேண்டும்

அசரிரீ
ஆசீர்வதித்தது
சூசை
சும்மா இருந்துவிட்டான்

அது சரியென
அவனே இருந்துவிட்ட போது
நாதியற்று - இவன்
நடுத் தெருவில் நிற்பானா

இத்தனையும் ஆனபின்
என்னுயிரே என்றிருந்தால்
இயலாமையும் -எதையும்
ஏற்கும் மனப்பான்மையும்

வேளைக்கு உணவும்
பிள்ளைக்கு தாயும்
வெளியுலக்குக்கு குடும்பமும்
இன்றியமையா தேவைகள்

ஆதலின் - இக்
காதலுக்கு
கண்ட பெயரிட்டு
கருகி விடாதீர்

கருத்துகள் இல்லை:

நீதி மய்யம்

அரிதார மய்யம் அரசியல் மய்யமாகுமோ பரிதாப கூட்டம் பகல்கனவு காணுது கருப்பும் சிவப்பும் கலந்து செய்த கலவை தானென கட்டியம் க...