வெள்ளி, ஆகஸ்ட் 9

நடை பழகு


பழகு
நடை பழகு
நலம் பேண 
நடை பழகு

நாலாறு மாதத்தில்
நடை பழகுவதும்
நாற்பதில் பழகுவதும்
நடக்க தெரியாததால்          (பழகு)

நடை பழக
காரணம் பலபல
விடை எதுவாயினும்
விடாமல்                               (பழகு)

நடை பழக
சாலை வழியோ
பூங்காவோ
இயந்திரமோ                  (பழகு)

வீதிவழி நடக்க
பாதி முகவரி
பார்க்கலாம்
மீதி தேட                           (பழகு)

அக்கம் பக்கமுள்ள
தெருக்களும் தெரிய
நாளொரு பாதையில்
நடையாய் நடந்திடு     (பழகு)

நாற்பதை கடந்தவர்
எடையை குறைப்பவர்
நோயை விரட்டுபவர்
நடையால் தீர்த்திடுவர்  (பழகு)

மாதர்தம்
மாத சுழற்சி
மாறி மாறி
மாறாமல் வர                     (பழகு)

உன்னை குறைக்க
எண்ணையை குறைக்கனும்
எனினும்
எடை குறைய                     (பழகு)

நினைத்த நேரத்தில்
நீட்டவும் ஒடுக்கவும்
நிணமும் சதையும்
நெளியும் கம்பியில்லவே     (பழகு)

நடையா - இது
நடையா என
நடைபல காண
நட - பூங்காவில்                  (பழகு)

முகம்பல பார்த்து
அகமும் மகிழ
வேகம் கூட்டி
வேடிக்கையாய் நடந்திட (பழகு)

பூமுடிக்க இருப்பவளும்
புதுபெண்ணாக போறவளும்
பூங்காவில் - நடை
போகும் அழகை காண          (பழகு)

உடலுழைப்பில்லா
உலக ஓட்டத்தில்
எடையும் - மன
அழுத்தமும் குறைய            (பழகு)

கண்ணுக்கு விருந்தாய்
கவலைக்கு மருந்தாய்
கால்களும் துவளாது
காலை மாலை                    (பழகு)
4 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை அய்யா
நடை பழகுவோம்
உடல் நலம் பேணுவோம்

ஊரான் சொன்னது…

நட!நட!
நாடெங்கும் நட!
உருக்குலைந்து போன நாட்டை
மிடுக்காக மாற்றிட
நட!நட!
நாடெங்கும் நட!

என்றுதான் என் எண்ணம் ஓடுகிறது.

வாழ்த்துகள்!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

நடையா - இது
நடையா என
நடைபல காண
நட - பூங்காவில்

நடைப்பயிற்சி பற்றி
நல்ல பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

பெயரில்லா சொன்னது…

''..கண்ணுக்கு விருந்தாய்
கவலைக்கு மருந்தாய்
கால்களும் துவளாது
காலை மாலை நடை பழகு..''
Nanru...Eniya vaalththu.
Vetha.Elangathilakam.

தேர்ந்தெடுங்கள்.........

ரஃபேலா போபர்ஸா அடிமைகளா 2 ஜியின் வாரிசுகளா தண்டகாரண்யா தூத்துக்குடி ஸ்டெர்லைட் கச்சத் தீவு காவேரி தண்ணீர் மாறிடுமோ - தங்க...