சனி, ஜனவரி 11

“தமிழ்” கடவுள்பன்மொழி புலமை
பக்தனுக்கு உண்டா
ஏழேழு உலகை
இரட்சித்து காக்கும்
பரமனுக்கும் உண்டா

அறிந்தது அறியாதது
தெரிந்தது தெரியாதது
புரிந்தது புரியாதது
சிவாஜி  - சிவனாய்
உச்சரிக்க அழகு

அழகன் முருகனோ
அவனப்பன் சிவனோ
அவதார பெருமாளோ
அவர்களது பத்தினிகளோ
அறியாதது ஏதுமுண்டோ?

கைலாய வாசமென்பதால்
காதில் விழுந்தவை
சமஸ்கிருதமாம் - ஆதலால்
பைந்தமிழ்
மைந்தனுக்கும் தெரியாதாம்

காமாட்சி
“கற்றது தமிழ்” அல்லவாம்
மீனாட்சிக்கு
சொக்கனை தெரியுமாம்
சங்கத்தமிழ் புரியாதாம்

தேவாரமோ திருவாசகமோ
தமிழில் ஒரு வாசகமோ
புரியலையாம்
தில்லை நடராசனுக்கு – இது
தீட்சிதர்கள் சொன்னது

ஆலயத்தம்மனும்
பாளையத்தம்மனும்
பைந்தமிழில் பூசிக்க
பரவசமடைந்ததாய்
பக்தர்கள் சொல்ல

சுப்புணி சுட்டபழம்
சூத்திர மொழியில்
கேட்டதாக அவ்வை
பாட்டெடுக்க - அவாள்
தேவமொழி என்றனரே

அனந்தனுக்கு
ஆராரோவோ அல்ல
பூபாளமோ
சமஸ்கிருதத்தில் வேண்டுமென
சட்டம் போட்டானா?

அண்ட சராச்சரத்தை காப்பவனுக்கு
அய்யாயிரமாண்டு தமிழ் தெரியாதாம்
அப்படியா! – அக்குடும்பத்தை
ஆரம்ப பள்ளிக்கு அனுப்புவோமா
ஆனா, ஆவன்னா கற்க?!

6 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அனுப்பி விடுவோம் - அங்கு சென்று...!

அம்பாளடியாள் வலைத்தளம் சொன்னது…

சிறப்பான வரிகளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் .மிக்க நன்றி
பகிர்வுக்கு .

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே

Senthil சொன்னது…

What I understand from your poem is that the LORD Shiva and his family don't know the Tamil in view of the outcome of the ruling of Supreme Court. But it is contradictory as compared to his son LORD Muruga is called as Tamil God. It is the concocted story of the Dikshitars and not as per the LORD's view. We keep abeyance the views of the Dikshitars and welcome the Tamil God.

Happy Pongal. Sweet edu kondadu.

அ. வேல்முருகன் சொன்னது…

எது கட்டுக்கதை தீட்சிதர்கள் சொல்வதா? கடவுள் வந்து சொல்வார் என நீங்கள் சொல்வதா?

அட பொய்யா இருந்தா கடவுள் உச்ச நீதி மன்றம் வந்து சொல்லட்டுமே?

சுப்ரமணிய சாமி தடுக்க மாட்டார்

பெயரில்லா சொன்னது…

''..அழகன் முருகனோ
அவனப்பன் சிவனோ
அவதார பெருமாளோ
அவர்களது பத்தினிகளோ
அறியாதது ஏதுமுண்டோ...''
Eniya vaalththu.
Vetha.Elangathilakam.

தேர்ந்தெடுங்கள்.........

ரஃபேலா போபர்ஸா அடிமைகளா 2 ஜியின் வாரிசுகளா தண்டகாரண்யா தூத்துக்குடி ஸ்டெர்லைட் கச்சத் தீவு காவேரி தண்ணீர் மாறிடுமோ - தங்க...