வியாழன், ஏப்ரல் 17

தமிழ். தமிழாஜப்பான் காரன்
சரக்கு விக்க
சட்டென படிக்கிறான்
தமிழை படிக்கிறான்

வடக்கிருந்து
வந்த நடிகை கூட
வாழ்வளித்த தமிழென
அழகாய் சொல்கிறாள்

நோக்கியா, பிளாக் பெரி
சாம்சங், சோனி
அத்தனை கைபேசியும்
தமிழில் தட்டச்சிட

குகூள், யாகூ
விக்சனரி என
விரியும் தமிழை
வெறுப்பாயா தமிழா

இனத்தில் தமிழனாய்
இங்கிலிஷ்ஷில் பேசி
இனியதமிழ் தெரியாதென
சிரிப்பாயா?.... சிந்தி


4 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தாய் மொழியை துறந்து, அடுத்தவர் மொழியில் பெருமையாய் பேசி மகிழ்கின்ற ஒரே இனம் தமிழினமாகத்தான் இருக்கும்.
இந்நிலை மாற வேண்டும் நண்பரே.
கவிதை அருமை
இனயாவது தமிழன் சிந்திக்கட்டும்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நாமே நமக்கு எதிரி - மொழியிலும்...

ஊரான் சொன்னது…

நன்று!

பெயரில்லா சொன்னது…

ஆம் சரியாகவே சொல்லப்பட்டுள்ளது.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

தேர்ந்தெடுங்கள்.........

ரஃபேலா போபர்ஸா அடிமைகளா 2 ஜியின் வாரிசுகளா தண்டகாரண்யா தூத்துக்குடி ஸ்டெர்லைட் கச்சத் தீவு காவேரி தண்ணீர் மாறிடுமோ - தங்க...