வியாழன், ஏப்ரல் 24

மகாத்மாவும் கோலி சோடாவும்
ஆச்சி மெஸ்
அரிஜன்
அடையாளங்கள்

ஏதுமற்றவர்கள்
உழைப்பால் உருவாக்கிய
உன்னத அடையாளம்

ஊரை விட்டு
ஒதுக்கி வைத்தவனுக்கு
உத்தமரிட்ட பெயர்

சேரி மக்கள்
அரியின் குழந்தையென
ஆரிவன் சொல்வது

அரிக்கு பிறக்காமல்
பரிக்கு பிறந்தவனா
பார்ப்பன பனியாக்கள்

சாதி மதமறியாது
சந்தித்த மனிதர்கள்
சாதித்து காட்டியது

இச்சாதி இவனெனவும்
இவன் கீழோனெனவும்
எடுத்தியம்புவது

அரி இல்லையென
அவன் அறியாததால்
அரிஜன் ஆக்கப்பட்டான்

தனிக்குவளை தனித்தொகுதியென
தனித்திராதே!!  தயாராகு......
தவறானதை சரிசெய்திட
1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

///தனிக்குவளை தனித்தொகுதியென
தனித்திராதே!! தயாராகு......
தவறானதை சரிசெய்திட///
எழுச்சிமிகு வரிகள் நண்பரே நன்றி

துடைப்பக் கட்டைகள்

வாரான் வாரான் பூச்சாண்டி   வாரணாசி கோட்டை தாண்டி தெருவ கூட்டிக் காட்டுறான்டி     திமிருதானே தினமும் செய்வானா  எருமை சாணம் பொறுக...