வியாழன், மே 8

கட்சி எதிர்கட்சி
கட்சி எதிர்கட்சி
காவியும் காங்கிரசும்
ஒரே க(கா)ட்சி
ஆனா வேறமூஞ்சி

டாட்டா, பிர்லா
கேட்டா கொடுத்தான்
வேதாந்தா, வீடியோகான்
வேண்டியா கொடுத்தான்

மிட்டல், "எல்" அன்ட் "டி"
ஐடிசியும் கொடுத்தான்
அம்பானி ஏன் - அந்த
பட்டியலில் மறைந்தான்

அடிமட்டத் தொண்டன்
அறிவானா அம்பானி
அனைத்துக் கட்சிக்கும்
அட்சயப் பாத்திரமென

எந்த முதலாளியும்
இல்லை என்பதில்லை
எக்கட்சி ஆயினும்
ஏமாற்றுவதும் இல்லை

எனக்கு மட்டும்தான்
”எஜமான்” படியளக்கனுமின்னு
எந்தக் கட்சிக்காரனும்
”எஸ்மா” சட்டமியற்றுவானா

சரிபாதி கொடுத்து
சனநாயகம் காத்தனரா
நாலுபேருக்கு நாலுதுண்டிட்டு
நாய்சண்டையை தடுத்தனரா

"டாடி" ஆட்சி
"லேடி" ஆட்சி
"மிடாஸ்" ஆட்சி - அட
அதுதான் ஒட்டுக் கட்சி

நிலக்கரி,  நியாம்கிரி மலை
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள்
இப்படி  எதுவுமில்லையெனில்
வரித் தள்ளுபடிகள்

இயற்கை வளமெல்லாம்
இவர்களை வளமாக்குது
இதனைக் கேட்டால் - இந்திய
இறையாண்மை தீவிரவாதியாக்குது

மக்கள் சொத்தெல்லாம்
மகேசன் சொத்தானது
தடங்கல் என்றாலோ - அரசு
பீரங்கியால் தாக்குது

வாங்கிய கூலிக்கு
வட்டியும் முதலுமா
வாரி வழங்கி - தன்
வாலை ஆட்டிட்டான்

சனநாயக கடமையாற்றி
சந்தோஷப் படுவோமா
இனியொரு விதி செய்திட
வினையொன்று ஆற்றுவோமா
4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இயற்கை வளமெல்லாம் நாசமாக்குவது தான் இவர்களின் முதல் வேலை...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

---///சனநாயக கடமையாற்றி
சந்தோஷப் படுவோமா
இனியொரு விதி செய்திட
வினையொன்று ஆற்றுவோமா///
இனியொரு விதி செய்திடுவோம்
அதை எந்நாளும் காப்போம்

KILLERGEE Devakottai சொன்னது…

சமூகத்திற்கு சரியான சவுக்கடி, நண்பரே....
Killergee
www.killergee.blogspot.com

Chandragowry Sivapalan சொன்னது…

மக்கள் சொத்தெல்லாம்
மகேசன் சொத்தானது
தடங்கல் என்றாலோ - அரசு
பீரங்கியால் தாக்குது

தாக்கு தாக்கு போட்டுத் தாக்கு. புரிகிறது சார்

இந்தியனா

மனிதனாய் இருக்காதே இந்தியனாயிரு மனிதன்தான் என்றால் - நீ தீவிரவாதி மக்களை நேசிப்பவனா - நீ மாவோயிஸ்டு அரசுக்கு எதிராக கேள...