ஞாயிறு, ஜூலை 19

புண்பட்ட மனமே

 

ழகன் முருகனுக்கு
ஆதரவு அளிக்கவில்லையென
அரோகரா என்று
அடியேனுக்கு ஓலமிட்டனர்

ஞானசம்பந்தனின்
பல்லக்குத் தூக்கிகள்
வழிக் களைப்புத் தீர
ஏலோ லோ பாடிச் செல்ல

அர ஹரோ ஹரா - அதாவது
நற்கதியை அருள் எனும்
நற்சொல்லை
கற்றுக் கொடுத்தாராம்

தமிழர்கள்
ஜெயராஜ் பென்னிக்ஸை
வல்வேல் காத்ததா
வாழ்வை முடித்ததா

இந்து அல்ல என்பதால்
பாராது இருந்தானா
அவர்கள் தமிழர்கள் என
ஆரிடம் சான்று பெற வேண்டும்

இந்து சனநாயம்
எதிர் கருத்தில்லாதது
எதிர்பது என்பது
இல்லாமல் செய்வதாம்

இந்து  எதிர்வாதங்கள்
முஸ்லிம்/கிருத்துவ மதத்தை தாக்கி
சொர்க்கம் காண்பது
இவர்களின் சனநாயகம்

அடுத்தவன் மதத்தை தாக்க
அருகதை எனக்கில்லை என்றால்
அந்த உரிமையை – உனக்கு வழங்கியது
எந்த ஊர் சட்டம்

சைவ முருகன்
சுப்ரமண்யன் ஆக்கப்பட்டதாகச்
சுகிசிவம் சொல்ல
சங்கடம் இந்துக்களுக்கா?

வணங்குபவனுக்கு – அதுவொரு
வடிகால்
மகுடிக்குக் கட்டுப்பட்டு
நம்பிக்கை என்கிறார்கள்

கிடா வெட்டு தடைச் சட்டத்திற்கு
கிளர்ந்தெழுந்தவன்
அறுபடை வீட்டில்
சேவலைப் படையலிட முடியுமா

தமிழ் கடவுள்தானே
தேவாராம் தமிழ்தானே
சிற்றம்பல மேடையில்
பாடிக் காட்டேன் தமிழை

நீச மொழி என்று
நாளாது வரை - தமிழைக்
கோயில் நுழையாதுக் காப்பவன்
தமிழ் என்றவுடன் தடுமாறிவிட்டாயோ

கொற்றவை மகனை
வள்ளி மணாளனை – சேயோனை
குலம் காத்தக்
குறிஞ்சித் தலைவனை

சுப்ரமண்யன் ஆக்கியே
சரவண பொய்கையென
சரடு விடுபவனின்
கார்த்திகேயன் கதை வேறு

வேல் என்பது
வேட்டைக்கான ஆயுதம்
வேள்வி நடத்துபவர்கள்
வேட்டைக்குக் களம் தேடுகின்றனர்

ஓட்டுப் பொறுக்குவதற்கு
ஒவ்வொருவருக்கும் ஒரு உத்தி
ஒன்றாக இருந்தவனை
ஓட்டிற்காக இந்துவாக்கி விட்டான்

சூத்திரம் அறியா
சூத்திரன் சூடேறி விட்டான்
சேகருக்கு பால் “பாக்கெட்” கிடைக்கும்
உனக்கு ஒன்றும் கிடைக்காது

சனாதனத் தர்மத்தில்
சனநாயகம் கிடையாது
நம்பிக்கையில் நந்தனாயிருந்தால்
தீயில் எறிவாய்

எதிர்வினை என்று
சிலையாகி விட்டவனை
சிதைத்துப் பார்க்கிறாய்
விதைத்தவன் சிதைவதில்லை           


2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிலரை மாற்றுவது கடினம் தோழர்...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தற்போதையத் தேவை மனிதம்

பனிவிழும் மலர்வனம்

பனிவிழும் மலர்வனம் பரிதியெழ மனங்கவரும் இனியன நிகழும் இணையென நீயாக எனினும் ஏந்திழையே எங்குனைக்  காண்பேன் கனிவுடன் வந்தென் கரம்தனைப்  பற்றுவா...