வியாழன், ஜூலை 2

சம்புகன்










மகேசனைக் காண
மாதவம் செய்தனன் சம்புகன்
மாட்சிமை தங்கிய மன்னனாய்
மானுட இராமன்

பார்பணன் மகன்
பரலோகப் பதவியடைந்ததால்
பாராள்பவனைப் பார்த்து
பலகேள்விக் கேட்டனர்

அதர்மம் அளவிடமுடியாததால்
அவன் மகன் மரணமெய்தியதாய்
அற்புதக் குற்றச்சாட்டை
அவனிடம் வைத்தனர்

சூத்திரச் சம்புகன்
சாத்திரங் கடந்து
சிவக் கடாட்சத்தை
அடைந்து விட்டால்

ஆலோசித்தான்
ஆரண்யம் சென்றான்
சூத்திரன் தவம் செய்ய
ஆத்திரத்தில் தலைக் கொய்தான்

மாண்ட பிராமணன் 
உயிர் பெற்றான்
கோசல ராமனின்
கொற்றம் சிறந்தது

உத்திர ராமாயணம்
உண்மையில்லை
வல்மீகி எழுதவில்லை
கதைகள் பலபல

சொர்க்கம் செல்ல
சனாதன தர்மம் மீறி
தவஞ் செய்ததால்
தலை யிழந்த வரலாறு

பார்வதி மீது
பாய்ந்த காதலால் என
விக்கிப்பீடியாவில்
விவரம் தெரிஞ்சவன் எழுதியுள்ளான்

சமஸ்கிருத
மொழிப் பெயர்ப்புப் பிழையால்
பெரியார் இராமனை
பெருங் குற்றம் சுமத்தினாராம்

ஆக கட்டற்ற கலைக்களைஞ்சியமென
ஆதாரமாய் கொள்ளாது
அறிவின் துணைக் கொண்டு
அணுகு விக்கிபீடியாவை

2 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

பார்வதி மீது
பாய்ந்த காதலால் என
விக்கிப்பீடியாவில்
விவரம் தெரிஞ்சவன் எழுதியுள்ளான்

அறிவின் துணை கொண்டு அணுகுவதுதான் சிறந்தது

அ. வேல்முருகன் சொன்னது…

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D

அடையாளம்

ஆதி மனிதர்கள் ஆதாம் ஏவாள் போல அவர்கள் வாழ நினைத்தனர் தேர்ந்தெடுக்க தேவனுக்கும் தேவிக்கும் வாய்பில்லாமலிருந்தது ஆளுக்காருத் திசையில் அவர்களி...