வெள்ளி, ஜனவரி 31

செயற்கை நுண்ணறிவு




செயற்கை நுண்ணறிவு
செல்லாக் காசாக்கியது
செருக்குடனிருந்த அமெரிக்காவை

51 இலட்சம் கோடி
அங்கு காணாமல் போனது
ஆரெடுத்தனர் அத்தனை கோடிகளை

கொள்ளை நிகழவில்லை
எல்லைக்கு வெளியில்
ஏதோவொரு கண்டுபிடிப்பு

ஊதிப் பெருக்கிய
ஊக வணிகத்தை
உடைத்துப் போட்டது

தென்னையில் தேள் கொட்ட
பெரும்பண்ணை அமெரிக்கா
பேயறைந்தது போல் தடுமாறுது

"டீப் சீக்"
டிராகன் தேசத்து
திடீர் வெளியீட்டால்

திருக்குறளாய்
திக்கட்டும் தீர்க்கமானதால்
உலகப் பொதுமறையானது

உள்ளூர் சரக்கைக் காட்டிலும்
உசத்தி யனாதால்
உச்சி மோந்தனர்

அறிவை
அள்ளியணைக்க
அமெரிக்கர்கள் முன்வரிசையில்

"டீப் சீக்" செயலி
தீப்பற்றி எறிய
சிலிக்கான் வேலி உருகியது

எவரும் அறிந்திடவும்
எளிய வழிகளால்
வடிவமைக்கப்பட்டதாலும்

கொள்ளும் சிலவு
கொஞ்சம் என்பதாலும்
கொஞ்சுகிறது அகிலம்

மானுட உழைப்பு
மனிதரில் சிலருக்கு மட்டுமல்ல
பேரண்டத்திற்கும் அல்லவோ?!

கருத்துகள் இல்லை:

விழித்தெழு பெண்ணே

விழித்தெழு பெண்ணே வித்தைகள் பழகிட பழகிடும் வேளையில் பகுத்தறிவை வளர்த்திடு வளர்ந்திட்ட அறிவால் வானத்தை களமாக்கு களத்திலே சனிதனை கோளென கொண்ட...