காதலால் கனிந்துருக
கண்டநாள் இந்நாளோ
ஆதலால் அகிலமே
ஆராதிக்க அனுமதியோ
தூதால் துணையவள்
துணிந்திங்கு வருவாளா
ஈதலால் ஈருடல்
இசைதிங்கு சேருமோ
ஏந்திழை ஏனையாளும்
ஏகாதி பதியாகிட
வேந்தன் வேலவன்
வேட்கையை வெளியிட
காந்தக் கண்ணழகு
கண்ணிமைக்க மறக்குமே
தீந்தமிழ் தேன்குரல்
தீண்டுமே மனதை
உன்னதமே உனதன்பு
உவரெனை உருமாற்றவே
என்னாளும் எனதன்பு
எனையாளும் தேவிக்கே
நன்னாளாம் நானவளை
நாழிகையும் பிரியாததே
இன்னலாம் இனியவளுக்கு
இவனின்றி இயங்குவதே
காற்றும் கடலலையும்
கணப்பொழுதில் மாறும்
நேற்றும் என்றென்றும்
நேசமது மாறாது
போற்றும் பொன்மானை
பொழுதும் பிரியாது
ஏற்றமுடன் இணைந்தே
எந்நாளும் வாழ்ந்திடவே
வாழ்த்தும்
அ. வேல்முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக