ஞாயிறு, மார்ச் 1
நிபந்தனையற்றதா காதல்
எந்த சூழ்நிலையிலும்
என்னிணை நீயென்று
என்றென்றும் சொல்வேனடி
உனக்காக
உன்னுடனேயே
ஒவ்வொரு பொழுதும் கழியுமடி
ஆயினும்
ஆயிரம் அவஸ்தைகள்
அத்தனையும் சந்திக்க
அடியே
அன்பன் துணையுண்டு
சோதனைகளை சோதிக்க
வா, இறுகப் பற்று
இருவரும் இணைந்து
எதையும் எதிர்கொள்வோம்
கோப தாபத்தில்
கொதித்தெழுந்தாலும்
குறைகளைச் சுட்டு
விட்டு விலகாது
விதியென நோகாது
வேறெங்கு செல்வேனடி
பூரணத்துவம் கொண்டவர்
பூவுலகில் யாருமில்லை
புன்னகையோடிரு
கடினமாக காலங்களில்
கரைந்து குழம்பாதே
பொறுமையோடிரு
காதல்
காலகாலமானது
கண் கலங்காதிரு
மகிழ்வானத் தருணங்களில்
மனமொத்து இருப்பது
இயல்பென்றாலும்
நீயிருக்கும் வரை
நிலைத்திருக்கும் எனதன்பு
நிபந்தனைகளுக்கு உட்டபட்டதல்ல
அன்பன்
அ. வேல்முருகன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கல்நெஞ்சுக்காரி
கல்நெஞ்சென உரைத்திட , கண்ணீர் வடித்தாய் ; சொல்லொண்ணா வலிகளை சொற்களில் பதித்தாய் . அல்லலில் உழலுவதை அடிமனதில் இரசித்தாய் ; இல்லா...
-
கல்நெஞ்சென உரைத்திட , கண்ணீர் வடித்தாய் ; சொல்லொண்ணா வலிகளை சொற்களில் பதித்தாய் . அல்லலில் உழலுவதை அடிமனதில் இரசித்தாய் ; இல்லா...
-
15 வயது முஸ்லீம் பெண் தனக்கு பிடித்தவரை திருமணம் செய்து கொண்டார். உயர் நீதி மன்றம் சொல்கிறது இந்து பெண் 18வயதுக்கு குறைவாக திருமணம் செய்த...
-
வேலையற்றவர்கள் வீதிக்கு வாராது, “விதியே” என்று விடியலுக்கு தவமிருக்க, அதிகாரத்தைச் சுவைத்த ஒட்டுண்ணிகள் அதிகாரமற்றவர்களுக்கு அளித்த ...
-
தாயென்றாய் தாரமென்றாய் தெய்வமென்றாய் பெண்ணை தாரம் தாயாக தின்ன வைத்தாய் மண்ணை கரு உருவாக காதல் வேண்டும் அல்ல சோதனைக்குழாய் ...
-
உழவர்களின் உபரி வருமானத்திற்கு உதவிய பசுக்களை , கோமியம் குடிப்பவர்கள் “ கோமாதா” என்று பாதுகாக்க கோடிகளில் நிதி ஒதுக்கிட , கொள்கை மு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக