வெள்ளி, செப்டம்பர் 21

அறிவியல் கடவுள்



தேடு
உன்னிலும்
உலகின் பொருளிலும்
உள்ளது கடவுள்

தேடலில்
கிடைப்பது
பற்பல - அதில்
தேர்ந்தெடுப்பது அறிவியல்


நியூட்டனின் ஆப்பிள்
இயக்கவியலை
எளிதாய் விளக்கியது

ஆதாம் கடித்த
ஆப்பிள்
அற்புத கடவுளை
அளித்தது

கலிலீயோவின் தொலைநோக்கி
சந்திரனையும்
செவ்வாயையும்
ஆய்ந்தது

ஆன்மீகத்தை நோக்கின்
இராகு கேதுவை
தீண்டியது

இயற்கையை
இசைவாக்குது
அறிவியல்

இல்லாததை
எல்லையற்றதென
ஏமாற்றுவது
ஆன்மீகம்

அறிவின் துணை கொண்டு
அணுவை கண்டுபிடித்தால்
அதர்வண வேதத்தில்
அன்றே கண்டு பிடித்ததாக
அளப்பது ஆன்மீகம்

அடடா
அணுவின் மூலக்கூறை
அதர்வணத்தில் காட்டென்றால்
ஆழ்ந்து படியென அறிவுரை

கடவுள்
உலகை படைத்தார்
கடவுளை
யார் படைத்தார்

படைத்த உலகில்
பலபல கடவுள்
பதவியேற்றது
பாகப்பிரிவினையா

அப்படியெனில்
எத்தனை கடவுள்
எத்தனை உலகம்
யாராவது சொல்லுங்கள்

அறிவியில்
ஆய்வுக்குட்பட்டது
ஆன்மீகம் - அதில்
விலக்குப் பெற்றது

ஆய்வின் முடிவை
அரும் சூத்திரங்களாலும்
அதன் வேறுபாடுகளையும்
அறிவால் விளக்குவர்

ஏனென்ற கேள்வியில்
ஏற்றம் பெறும் அறிவியல்

ஏனென்றும் ஏதுவென்றால்
எல்லாம் அதுவென்று
பதிலற்றது ஆன்மீகம்

தவறிலிருந்தோ
தந்த பதில்களிலிருந்தோ
தேர்தெடுப்பது
அறிவியல்

அறிவியலை சோதிக்க
அறிவுடை மனிதருக்கு
அகிலத்தில் தடையேது

மதங்களை சோதிக்க
போப்பும், மவுல்வியும்
சங்கராச்சாரியும்
சரியென்பார்களா?

அறிவியல்
அனைவருக்குமானது
ஆன்மிகம்
அடிபணிவருக்கு மட்டும்

கணணியோ, கைப்பேசியோ
கண்டவரும் கையாளலாம்
கண்ணனை ராமனை
பாரதிய ஜனதா மட்டும்
பாதுகாக்கலாம்

இந்துவத்தின் அடிப்படை
அத்வைதம்
த்வைதம்
விசிஷ்டாத்வைதம்

ஆப்ரகாமின் வாரிசுகள்
இஸ்ரவேலர்
இயேசு கிறிஸ்து
முகமது நபி

மதங்களின்
முரண்பாடு
மனித இன வேறுபாடு

அறிவியல்
இதயத்தை அறுத்து
இன்னும் வாழ வைக்கும்

ஆன்மீகம்
மசூதியை இடிக்கும்
குஜராத்தை கொளுத்தும்


கடவுளின்
கடைக்கண் பார்வையின்றி
கண்டுபிடிப்புகள்
கனவிலுமில்லை

படைத்தவனே
படைத்தான்
பகடை நீ
பகர்ந்தது ஆன்மீகம்


அவனின்றி
அணுவுமில்லை
அவனால்தான்
அனைத்தும் படைக்கப்பட்டன

பாரவாயில்லை
பாவியனாலும்
அணுவைக் கொண்டே
அவனில்லாமல் செய்யலாமா?









5 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அறிவியம்... ஆன்மிகம் என இன்றைக்குள்ள நிலவரத்தையும் ஒப்பிட்டு பலவற்றை சிந்திக்க வைக்கிறது... வாழ்த்துக்கள் சார்... நன்றி...

பெயரில்லா சொன்னது…

நிறைந்த கருத்துப் பொதிந்த ஆக்கம்.
பல தடவை படிக்க வேண்டும்.
நல்வாழ்த்து சகோதரா. பணி தொடரட்டும்.
மீண்டும் வருவேன்
வேதா. இலங்காதிலகம்.

'பசி'பரமசிவம் சொன்னது…

//எத்தனை கடவுள்? எத்தனை உலகம்? யாராவது சொல்லுங்கள்//

அருமையான, மிக அழுத்தமான கேள்வி.

kowsy சொன்னது…

ஆழச் சிந்திப்பவன் மடையன். ஆமாப் போடுபவன் தான் ஆத்தீகன். வைரமுத்து அழகாக மனிதனைச் சொல்லியுள்ளார் . கடவுளையே படைத்தவனல்லவா நீ என்று . கடவுள் உலகைப் படித்தால் கடவுளைப் படைத்தவர் யார் . அவர் எங்கிருந்து படைத்தார்? நாம் எதைக் கேட்டாலும் சிந்திக்கவே மாட்டார்கள் சார். இன்றும் ஒருவர் என்னிடம் வந்து டிசம்பர் இருபத்தொராம் திகதி உலகம் அழியப் போகின்றது . ஜெசுவிடம் வாருங்கள் என்றார் . ஜேசு பிறந்த இடத்திலேயே நிம்மதி இல்லை . உலகத்தை எங்கே காக்கப் போகின்றார் என்று வாசலில் வைத்தே வழி அனுப்பிவிட்டேன். எழுதுங்கள் எழுதுங்கள் திருந்தும் மனம் திருந்தும்

Dino LA சொன்னது…

அருமையான கவிதை

தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...