வியாழன், அக்டோபர் 23
தருமி: 794. தமிழ்மணம் மாறுமா ... மாற்றுவோமா?
தருமி: 794. தமிழ்மணம் மாறுமா ... மாற்றுவோமா?: பல முறை தொடர்ந்து எழுதியும் இது வரை தமிழ்மண பொறுப்பாளர்கள் எந்த வித எதிர்வினையும் செய்யவில்லை. ஒரு அடிப்படை நாகரீகம் கருதியாவது ஏதாவது ஒரு பதிலோ, பதிவோ கொடுத்திருக்கலாம். அந்த அளவு basic courtesy கூட காண்பிக்காமல் பதிவர்களுக்கு அவர்கள் கொடுக்கும் ‘மரியாதைக்கு’ மிக்க நன்றி. அந்த அளவில் தான் நமது உறவும் இருந்து வந்திருக்கிறது என்பது மிகவும் வருத்தத்திற்குரிய
செவ்வாய், அக்டோபர் 21
ஆங்கிலம்
அறிவா அற்புதமா
அறிவியலா அஞ்ஞானமா
புரியாச் சொற்பதமா
புரியயவை சாதகமா
தெரியா மொழிகள்
தேவையா சுமையா
சராசரிக்குச் சரியாகுமா
சாப்பாட்டின் பொருளாகுமா
ஆண்ட மொழியானதால்
தராதரம் வந்ததா
தமிழும் தாழ்ந்ததா
திராவிட வேராய்
திகழும் தமிழ்மொழி
பரவட்டும் திக்கெட்டும்
பழகிடுவோம் செம்மொழி
மொழியொரு வழியே
மானுடத் தொடர்புக்கு
மொழியா யாவும்
மூடிவைத்தப் பாலாகும்
இழிவா உயர்வா
இதுவென் மொழியென்றிட
தெளிவாய்ப் பகர்வாய்த்
தேன்தமிழ் நம்மொழியென
சிந்தனை மொழிக்கல்ல
சீர்தூக்கி ஆயும் மனிதனுக்கே
நிந்தனை வழியல்ல
நினது மொழியும் வாழட்டுமே
நந்தனை எரித்து‘
நாயன்மா ராக்க வேண்டாமே
நம்தமிழை வளர்க்க
நாமொன்றும் நாண வேண்டாமே
கண்மூடித் தாய்தமிழில்
கண்டதும் இல்லையெனத் தூற்றாமல்
கண்டுபிடிக் கல்வியறிவில்
காணும் பொருளின் சொற்பொருள்
சென்றுபடி மேலதேயம்
சிறப்பான எதையும் கற்றுவா
கற்கண்டுத் தமிழ்மொழியில்
கற்றதைப் பரப்பு வெற்றிபார்
அம்மொழியில் பேசிடவே
ஆனந்தமா அல்ல பெருமையா
செம்மொழித், தமிழுனுக்கு
சேந்தேள் விஷமா கூறுமைய்யா
பன்மொழிப் புலமை
பண்படுத்த வேண்டுமே உன்னை
என்மொழிப் பெருமை
எவரும் பேசிடப் பெருகுமே
ஆங்கிலமொரு மொழிதான்
அதுபோலவே கிரேக்கமும் சீனமும்
இங்கிதமாய்க் கூறாதே
இகலோகம் சுற்றிட உதவாதென
எங்கெல்லாம் போவாய்
எதற்காய்ப் போவாயென சொல்லிடேன்
அங்கெல்லாம் நீபேசும்
ஆங்கில அழகைப் பார்த்திடுவேன்
புதன், அக்டோபர் 8
ஊடல்
வேண்டா என்பதா வேலவனை
வீண்பழியால் சோதனை
விண்ணப்பமே மன்னிப்பாயா காவலனை
இல்வாழ்வில் ஊடலே
ஏனிந்த தண்டனை ஏந்திழையே
ஏனென்று கேட்டாலே
என்மனம் ஆறுமே மாறுமே
மெளனமா உனதுமொழி
மடைதிறந்த மார்கழி சங்கீதமே
பௌதிக பார்வைதானே
பாவையுனை பற்றிட வைத்தது
கெளதமனா ஆசைதுறந்து
காசிராமே ஸ்வரம் சென்றிட
ரௌத்திரம் வேண்டாமடி
ராசியாகி ராஜசுகம் தேடுவோமடி
செவ்வாய், அக்டோபர் 7
திங்கள், அக்டோபர் 6
அச்சம் தவிர்
பொழுதொரு வண்ணம்
போராட்டம் தொடர
ஏனென்றோ
எதற்கென்றோ – எவரும்
கேட்பாரில்லை
இதுவொரு வழிகாட்டியென
இருக்கும் கட்சிகள்
ஏதும் சொல்லையோ
எரியும் கொள்ளியில்
நல்ல கொள்ளி தேடும்
ஏமாந்த மக்களே
தனியார்மயம்
தாராளமயம் – தந்த
அச்சத்தை பாருங்களேன்
தனியார் பேரூந்துகள் ஓடவில்லை
தனியார் பள்ளிகள் இயங்காதாம் – இவை
பயத்தில் நடக்கிறதோ
வணிகர் கடையடைப்பு
வரத்தை எதிர்பார்த்தா
வரும் கும்பலுக்கு பயந்தா
திரையுலக விரதம்
திரண்ட சொத்தை காக்கவா
தனித்து விடப்படும் அச்சத்திற்கா
பத்திரிக்கையாளர் விரதம்
கொடுக்கும் விளம்பரத்திற்கா
கோபக்கணையில் தப்புவதற்கா
காவேரி தாயை
கர்நாடகத்தில் சிறைவைத்தது
காலத்தின் கோலமா?
கோடநாடே
கர்நாடக சிறையென
நீதி சொல்ல
பிரதிவாதியோ
நீதிக்கு தண்டணையா
நீயெனக்கு சரிசமமா என்கிறான்
உண்ணாவிரத போராட்டம்,
மனித சங்கிலி போராட்டம்,
ஆலயங்களில் கூட்டு பிரார்த்தனை
வேள்வி யாகம் நடத்துதல்,
பால்குடம் எடுத்து வழிபடுதல்,
அங்கபிரதட்சனம் செய்தல்
மொட்டையடித்தும்
முட்டி போட்டும்
கோயில்களில் நேர்த்தி கடன்கள்
உச்சநீதிமன்றமே
உத்தமியை விடுதலை செய்யென
உதார்கள் (பேனர்கள்)
இத்தனையும் எதற்கு
இன்னும் கொள்ளையடிக்கவா
ஏமாந்தவன் தமிழனென்று சொல்லவா
அச்சம் தவிர்
ஆண்மை தவறேல் என்றவன்
ரௌத்திரமும் பழகு என்றிருக்கிறான்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
திரளழகு
திரளழகை தீபவொளி திருத்தி எழுதிட முரணேது முந்தானை முகமன் கூறிட மரகதவுடல் மச்சானை மகிழ்ச்சியில் ஆழ்திட சரசங்கள் பயின்றிட சரணடை பேரழகே நின்னசைவ...
-
சங்கிகளுக்கு சளைத்தவர்களில்லை என பழனியில் பட்டம் பெற்றவர்கள் பதவிகாலம் முடிவடைவதால் பதினாறு ஆண்டுகள் கழித்து பக்தக் கோடிகளை பரவசப் படுத்தப் ...
-
திரளழகை தீபவொளி திருத்தி எழுதிட முரணேது முந்தானை முகமன் கூறிட மரகதவுடல் மச்சானை மகிழ்ச்சியில் ஆழ்திட சரசங்கள் பயின்றிட சரணடை பேரழகே நின்னசைவ...
-
அறிவேணி ஆசிரியர் அகரத்தில் ஆரம்பித்து அறிவியல் ஆயிரம் அதனுடன் அறநெறி சிறியோர் நெஞ்சில் சிறப்புடன் பதித்திட செறிவுற்ற மாணவனாய் செயலாற்ற மகிழ...
-
அதிர்வில்லா முத்தத்தில் ஆனந்தம் ஏதடி எதிர்பாரா வேளையில் எத்தனைச் சுகமடி உதிரம் கொதிக்க உதடுகள் துடிக்க கதிகலங்கும் முத்தத்தை கண்ணே வழங்கட...
-
நீ என்னை சந்திக்கும் போதெல்லாம் இறகுகள் முளைத்து பறக்கிறேன் உன்னருகாமையில் - நான் உயிரோடிருப்பதை உணர்கிறேன் என்றென்றும் எனதானவன் நீ எனது ப...



