களவுமணம் கலக்கமே
காதல்களம் காண்போர்க்கு
காண்போர் யாவரும்
காதுபட பேசவே
பேசும் செய்திகள்
பெற்றோர் அறிந்திட
அறிந்தும் அறியாததாய்
அரண்தனை பலப்படுத்திட
பலப்படுத்திய செய்தியை
பரிதவிப்பாய் தெரிவித்திட
தெரிந்த தலைவன்
தேவியை மீட்டிட
மீட்டிய இராகத்தில்
மேளதாளம் முழங்கிட
முழங்கிய வேகத்தில்
முத்தங்கள் பரிமாறிட
பரிமாறிய முத்தங்கள்
பாற்கடலாய் உருமாற
உருமாறிய உத்தமி
ஊணுறக்கம் மறந்தாள்
மறக்க முடியுமா?
மன்னவன் பரிசை
பரிசின் காரணம்
பற்றிய களவுமணமே!
காதல்களம் காண்போர்க்கு
காண்போர் யாவரும்
காதுபட பேசவே
பேசும் செய்திகள்
பெற்றோர் அறிந்திட
அறிந்தும் அறியாததாய்
அரண்தனை பலப்படுத்திட
பலப்படுத்திய செய்தியை
பரிதவிப்பாய் தெரிவித்திட
தெரிந்த தலைவன்
தேவியை மீட்டிட
மீட்டிய இராகத்தில்
மேளதாளம் முழங்கிட
முழங்கிய வேகத்தில்
முத்தங்கள் பரிமாறிட
பரிமாறிய முத்தங்கள்
பாற்கடலாய் உருமாற
உருமாறிய உத்தமி
ஊணுறக்கம் மறந்தாள்
மறக்க முடியுமா?
மன்னவன் பரிசை
பரிசின் காரணம்
பற்றிய களவுமணமே!
அ. வேல்முருகன்
2 கருத்துகள்:
இது உண்மையிலேயே மிகவும் நேர்மையான, வேதனைக்கும் விழிப்புக்கும் இடமான கவிதை. வளர்ச்சி என்ற பெயரில் நடைபெறும் நிலங்கள் சிதைவு, இயற்கை அழிவு, விவசாயத்தின் வீழ்ச்சி மிகவும் வருத்தமளிக்கிறது. ரியல் எஸ்டேட் வளர்ச்சி, பணலாபம் என்ற எண்ணத்தில் மண்ணையும் மரங்களையும் இழந்து விட்டோம். இந்த கவிதை ஒவ்வொருவருக்கும் சிந்தனைக்குரிய உரையாடல் ஏற்படுத்தும்.
தங்கள் கருத்துரைக்கு நன்றி. ஆனால் கருத்து காதல் கவிதையில் பின்னுட்டமாய் பதிவிடப்பட்டுள்ளது. மேலும் தங்கள் வலைதளத்தை பார்த்தேன். ஆங்கிலத்தில் உள்ளது. தமிழில் இருந்தால் படிப்பதற்கு எளிதாக இருக்கும். நன்றி
கருத்துரையிடுக