வியாழன், மே 8

பேரண்டத்தின் பேரழகி

 












கெண்டைக் கண்கள்
தண்டைக் கால்கள்
அண்டை அயலார்
அண்ட நினைக்கும்
பேரண்டத்தின் பேரழகி


சிவந்த அதரங்களால்
சிந்தியச் சொற்கள்
அட்சரச் சுத்தமாய்
ஆலாபனைச் செய்திட
ஆனந்தத் தாண்டவமாடினேன்

அலங்காரமா பிறையிலிட்ட
அத்திலகமும் நீரும்
அழகுதனைக் கூட்டவா
உலகம் மறந்து
உன்மத்தம் ஆக்கிடவா

எட்டு மடிப்பும் கலையாத
பட்டுச் ஜரிகைச் சேலையில்
கட்டுக் குலையாதவள்
கட்டுத்தறிக் காளைதனை
கட்டுப் படுத்திட

கால் கையசைத்து
கன்னக்குழி விழ
புன்னகையுடன் கதைக்கும்
கவித்துவ அழகை
கண்ணிமை மூடாது ரசித்திட

இளமையின் வளமையால்
களவுபோன எம்மனதை
கொள்ளைக் கொண்டவள்
உள்ளத்தில் உள்ளதாவென
ஊடுறுவிப் பார்த்திட

கலம்பகம் எழுதி
கலகங்கள் செய்து
காதலாய் பார்த்திட
செயற்கை நுண்ணறிவு
செதுக்கியச் சிற்பமாம்

 


கருத்துகள் இல்லை:

நளினம்

  கற்றைக் கூந்தலில் பூச்சூடி கட்டுடலில் ஆடைச் சூடி சிற்றிடை தன்னில் சிறையிட்டு சிந்தனையைச் செயலிழக்கச் செய்தே பற்றற்று வாழ்ந்த பாமரனை பரி...