வெள்ளி, டிசம்பர் 3

ராஜா

மரணம் இயற்கைதான்,  நம் மனது வரித்துக்கொண்ட வயது மரணத்திற்கு ............ ஆம் 47 வயதில் எனது ராஜா அண்ணன் மரணத்தை தழுவினார் என்ற செய்தி மனம் ஏற்க மறுக்கிறது.  பழகுவதில் இனியவர், ஆதரவானவர் என்பதால் எனக்கும் பற்றுதல் அதிகம்.

பெரியப்பாவின் மகன்,  முதன் முதலாய் அவரை பார்த்தது1986 ல், நான் ஒரு கடையில் வேலையாய் இருக்கும்போது அப்பாவோடு அவரை பார்த்தேன்.  1990ல் திருமணம் 2010 மரணம்.  வேதனை.  காலையில் அண்ணியின் தந்தை இத்தகவலை சொன்னதிலிருந்து மனம் எதிலும் ஈடுபடவில்லை.

பெரியப்பாவும் இதே வயதில் மரணத்தை தழுவினார்.  அண்ணன் சவுதியின் ஜெத்தா நகரில் வேலை நிமித்தமாக சென்றபோது மரணம். அவரது உடல் ஞாயிறு அன்று திருச்சி வந்தடையும் என்றனர்

எங்கள் குடும்பத்தில் நிர்வாகயியலில் முனைவர் பட்டம் முதலில் பெற்றவர். பதினெழு ஆண்டுகளுக்குமேல் திருச்சி NIT யில் பணிபுரிந்து பின்பு மலேசியாவில் ஆசிரிய பணியாற்றியவர் இன்று இல்லை.

அக்டோபர் 16 அன்றுதான் அவரை சந்தித்தேன். இனி பேசுவதற்கு அண்ணன் இல்லை.  அண்ணிக்கும் அவரது மகன்களுக்கும் என்ன ஆறுதல் சொல்வது

கருத்துகள் இல்லை:

துடைப்பக் கட்டைகள்

வாரான் வாரான் பூச்சாண்டி   வாரணாசி கோட்டை தாண்டி தெருவ கூட்டிக் காட்டுறான்டி     திமிருதானே தினமும் செய்வானா  எருமை சாணம் பொறுக...