வெள்ளி, ஏப்ரல் 29

மதமும் நரம்பு தளர்ச்சியும்

சமீபத்தில் எனது உறவுகார பெண்ணுக்கு திருமணம் நடைப் பெற்றது.   நாங்கள் அனைவரும் வாழ்த்திவிட்டு வந்தோம்.   மணப்பெண் நான்காண்டு மருத்துவ தாதியர் பட்டம் பெற்றவள்.   இரண்டாண்டு அப்பணியில் இருந்தவள்.

ஒரு வாரத்திற்குள் பிரச்சினை.   ஒன்றுமில்லை பலவீனத்தால்பேயாட்டம் ஆடிவிட்டாள்.  மாப்பிள்ளை வீட்டில் சந்தேகப் பார்வை.  மணமகன் பெண்ணை நன்றாக பார்த்துக் கொண்டார் ஆனால் உற்றார் உறவினர்களுக்கு பெண் வீட்டார் மீது கோபம்.    மருத்துவம் பார்த்து தற்போது நல்லபடியாக உள்ளார்.

விஷயம் இதுவல்ல

என் உறவினர்கள் நம்பிக்கை வேறுவிதம்.  பெண்ணுக்கு இப்பிரச்சனை சில நாட்களாக இருந்துள்ளது.   அதாவது தாதியர் படிப்பு படிக்கும்போதிலிருந்து.  அவளின் அப்பாவிற்கு யாரோ செய்வினை வைத்தார்களாம்.   அவரின் ஏழரை நாட்டு சனி முடியும் போதும் வினை இவளை தொற்றி கொண்டதாம்.   அதனால் கோயிலேறி வேப்பிலை அடித்து, மந்திரவாதி பார்த்து பேயோட்டி,  திருமணத்தை முடித்துள்ளனர்.

அய்யோ பேய் மட்டும் போகவில்லை அடிக்கடி தலை காட்டியபடி இருந்துள்ளது.

படிப்பு விடுதியில் என்பதால் தோழியர் வைத்தியமாய் பைபிளை கொடுத்து இயேசுவிடம் வேண்டுகோள் விடுக்க, தளர்ச்சி நீங்கியதாக பெண்ணுக்கு நம்பிக்கை.   இது பெற்றோரிடிம் கிருத்துவத்தில் மணமகன் பார்க்க வேண்டுமென்று சொல்லுமளவுக்கு இருந்தது.

அவரோ இந்து நான் என்று முடித்து விட்டார்.  இயேசு கைவிட்டு விட்டார்.  ஒரு வாரத்தில் இந்து பேயோ கிருஸ்துவ பேயோ பிடித்து அம்பலபட்டு விட்டார்கள்.

திரும்பவும், வேப்பிலை, பாய் மந்திரம் ஓதுவது,  தொடர்கதை,
மருத்துவம் துணைகதை

கைவிடுபவனே கடவுள் என எப்போது தெளிவர் எம் மக்கள்

தளர்ச்சிக்கு தேவை மருத்துவமா மதமா மனிதர்களே இப்போது சொல்லுங்கள்

கருத்துகள் இல்லை:

திரளழகு

திரளழகை தீபவொளி திருத்தி எழுதிட முரணேது முந்தானை முகமன் கூறிட மரகதவுடல் மச்சானை மகிழ்ச்சியில் ஆழ்திட சரசங்கள் பயின்றிட சரணடை பேரழகே நின்னசைவ...