திங்கள், மே 2

ஒசாமா-ஒபாமாபத்து ஆண்டுகள்
பரலோகம் அனுப்ப
பார் ஆளும்
பாரக் ஒபமாவிற்கு

இங்கே
ஒபமா ஒப்புமைதான்
ஒபமா,புஷ்
இன்னும்
எத்தனை பெயர் வைத்தாலும்
பத்தாண்டுகள் என்பது......

மனித நாகரிகத்தின்
மதங்களின்
அச்சமூட்டும்
நச்சு - ஓசாமா

உலகின்
எந்த மூலையிலும்
தன்னால் வாழ முடியுமென்று
தொடை தட்டியவன்
தொலைந்து போனான்

ஓசாமாவின் ரசிகர்கள்
துக்கப்படலாம்
ஹமாசும்
வேதனைப்படலாம்

எதிரியின் எதிரி
நண்பனென்று
இன்னும் பலர்
பட்டியலில் சேரலாம்

ஊட்டி வளர்த்தவனே
உயிரை கொய்து விட்டான்
போட்டி என்பதால்
போட்டு தள்ளி விட்டான்

அரசியலின்
கொடுக்கல் வாங்கல் இது
ஆம் ஓபாமாவின்
வாங்கல்

ஒருவேளை
அடுத்த நான்காண்டு
அவரின் பதவிக்கான
உயிர் வாங்கலோ...........

1 கருத்து:

கந்தசாமி. சொன்னது…

///ஊட்டி வளர்த்தவனே
உயிரை கொய்து விட்டான்
போட்டி என்றால்
போட்டு தள்ளி விட்டான்//// நிதர்சனமான உண்மை பாஸ், அமெரிக்கா வளர்த்த "கடா" தானே ஒசாமா

நீதி மய்யம்

அரிதார மய்யம் அரசியல் மய்யமாகுமோ பரிதாப கூட்டம் பகல்கனவு காணுது கருப்பும் சிவப்பும் கலந்து செய்த கலவை தானென கட்டியம் க...