வியாழன், நவம்பர் 3

ஆனந்தம்

மகளையும், மகனையும் பள்ளியிலிருந்து அழைத்து வர சென்றிருந்தேன்.  மகள் சொன்னாள், I am happy மகன் சொன்னான் I have bad news.    என்னவென்று கேட்டேன்.

மகள் சொன்னாள் அவளுக்கு மதிப்பெண் பட்டியல் கொடுத்துள்ளதாகவும் ஆனால் பெற்றோர் கையொப்பம் தேவையில்லை என ஆசிரியர் சொன்னதாகவும் ஆனால் அப்பட்டியலை பெற்றொரிடம் காண்பித்து இரண்டு நாட்களுக்குள் திருப்பி கொடுத்துவிட வேண்டும் என்று சொன்னார்களாம்.

90 க்கும் குறைவாக மதிப்பெண் எடுக்கும் போது இரண்டு நாட்கள் தள்ளி கையெழுத்து போட்டு அடுத்த தேர்வில் கூடுதல் மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற உறுதி மொழி பெற்று கையொப்பம் இட்டு வந்தேன் கடந்த ஆண்டு வரை. இந்த ஆண்டு நிலை என் மகள் மகிழ்ச்சியோடு இருக்கிறாள்.

படிப்பு என்பது ஒரு துன்பமான நிலை என்பதால் இந்த மகிழ்ச்சி என நினைக்கிறேன்.

மகனுக்கு Reading Exam (படித்தல்),  அவன் சரியாக படிக்காததால் 'C'  Grade   அளித்தார்களாம்.  அது எனக்கு கெட்ட சேதி,

ஆம் அவனை படிக்க பழக்க வேண்டும்

2 கருத்துகள்:

suryajeeva சொன்னது…

மாற்றுக் கருத்து உள்ளது, மன்னிக்கவும்

அ. வேல்முருகன் சொன்னது…

தங்கள் வருகைக்கு நன்றி, மாற்று கருத்து பதியுங்கள், சரியெனில் திருத்திக் கொள்கிறேன்.

நீதி மய்யம்

அரிதார மய்யம் அரசியல் மய்யமாகுமோ பரிதாப கூட்டம் பகல்கனவு காணுது கருப்பும் சிவப்பும் கலந்து செய்த கலவை தானென கட்டியம் க...