திங்கள், நவம்பர் 14

சபாஷ் சரியான போட்டி

பஜாஜ் நிறுவனத்தின் தலைவர் கிங் பிஷ்ஷர் நிறுவனத்திற்கு எவ்வித நிதி உதவியும் அரசு அளிக்க கூடாது என்று கூறியுள்ளார்.  எந்தவொரு தனியார் நிறுவனமும் நிதி தடுமாற்றத்தால் இறக்க நேரிடும் என்றால் இறக்கட்டும் என திருவாய் மலர்ந்துள்ளார்.

நுகர்வோர் மற்றும் பணியாளர் நலன் கருதி அரசு நிதியுதவி செய்ய வேண்டுமென பிரதமர் அலுவலம் வரை சென்றுள்ளார் மல்லையா.  ஆம் இவரின் சாராய கம்பெனிகள் கொழுத்த இலாபம் ஈட்டுவதால் அரசுக்கு கொடுக்க வேண்டிய வரியைக் காட்டிலும் அதிகமாக அதாவது லாபத்தில் கூடுதலாக ஏதாவது கொடுத்தாரா?


கேளிக்கை ஒன்றே வாழ்க்கையென வாழும் இவருக்கு நுகர்வோர் மற்றும் பணியாளர் மீது அக்கறை என்பது நரி எதற்கோ அழுதது என்பது போலதான்

கருத்துகள் இல்லை:

விவசாயம் காப்போம்

காடுமேடு திருத்தி கழனியா இருந்ததை சூடுசொரணை இல்லாது சூறையாடி விட்டு வளர்ச்சி என்று வாய்சவடால் விடுகிறான் களர்நில மானவுடன் கார்ப்பரேட்டு மற...