சனி, ஜூன் 27

வேண்டுதல்



 

களைகட்டும் அழகில் சொக்கி
   கண்டாங்கிச் சேலைக் குமரிய
இளவட்ட கல்லத் தூக்கி
   இணையாக ஏற்ற வாழ்வில்
பளபளத் தங்கத்தைத் தேடாது
   பக்குவமாக் கடமைய முடிச்சு
தளர்ந்த வயதில் வேண்டுதல்
    தலம்பலக் கண்டிட வந்தோம்



வேண்டி வந்த இடத்தில்
    வேண்டி நின்றாள் வேடிக்கை
ஆண்டு பலவுங் கடந்தாலும்
   அந்நாள் நினைவு வந்திடவே
தொண்டுக் கிழவ னானாலும்
   துணைக்கு உதவி செய்தலே
ஈண்டு நன்மை பயக்கும்
   இனிது நிறைவேற மகிழ்ச்சி


2 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தொண்டு கிழவ னானாலும்
துணைக்கு உதவி செய்தலே
ஈண்டு நன்மை பயக்கும்
இனிது நிறைவேற மகிழ்ச்சி

படமும் பகிர்வும் மகிழ்வினைத் தருகின்றது

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசித்தேன் படத்தையும்...

பனிவிழும் மலர்வனம்

பனிவிழும் மலர்வனம் பரிதியெழ மனங்கவரும் இனியன நிகழும் இணையென நீயாக எனினும் ஏந்திழையே எங்குனைக்  காண்பேன் கனிவுடன் வந்தென் கரம்தனைப்  பற்றுவா...