வியாழன், செப்டம்பர் 29

நிர்வாணம்

நேற்றிரவு 9 மணியளவில் லஸ் சந்திப்பில் ஓர் ஆண்  நிர்வாணமாக நடந்து செல்கிறார்.  நான் கூட ஜைனத் துறவியாயிருக்கும் என நினைத்து அமைதியாய் இருந்தேன்.  ஒருபுறத்திலிருந்து மறுபுறம் சென்றவுடன் கையில் சுருட்டி வைத்திருந்த வேஷ்டியை கட்டிக் கொள்கிறார்.

என்னவென்று சொல்வது இந் நடவடிக்கையை

இன்று காலை தினத்தந்தியில் ஒரு செய்தி

சோதிடன் பேச்சை நம்பி, இளம் பெண் பல்லாவரம் ரோட்டில் நிர்வாணமாக நடந்தாள் என்று.  காதலன் வேறொரு திருமணம் செய்து கொண்டான்.  அவனையே திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று ஆவல்.  சோதிடன் 10 கோயிலை நிர்வாணமாக வலம் வந்தால் காதலன் கைவசமாவான் என்று சொல்கிறான்.

பேதை நம்பி, சொந்த ஊரில் செய்தால் அசிங்கம் என்றெண்ணி பல்லாவரத்தில்10வது கோயில் சுற்றும் போது போலிஸிடம் மாட்டிக் கொண்டாள்.  மன்னிக்கவும் அவர்கள் சேலை கொடுத்து நல்லபடியாக நடத்தியதாக செய்தி சொல்கிறது.

மன பிறழ்வு

அல்லது நினைத்ததை அடைய எதையும் செய்யலாம்

விடை கிட்டுமா இவர்களுக்கு
2 கருத்துகள்:

தருமி சொன்னது…

//பல்லாவரத்தில்10வது கோயில் சுற்றும் போது போலிஸிடம் மாட்டிக் கொண்டாள். //

கட்டாயம் அந்த ஜோதிடனும் பின்னாலே வந்திருப்பான் என நினைக்கிறேன்?!

மனோவி சொன்னது…

ஒன்பது கோயிலில் மாட்டாமல் கடைசி கோயிலில் மாட்ட காரணம் யாதோ?

துடைப்பக் கட்டைகள்

வாரான் வாரான் பூச்சாண்டி   வாரணாசி கோட்டை தாண்டி தெருவ கூட்டிக் காட்டுறான்டி     திமிருதானே தினமும் செய்வானா  எருமை சாணம் பொறுக...