சனி, அக்டோபர் 29

புரட்சி


புரட்சித் தலைவர்
புரட்சித் தலைவி
ஆம் உங்களுக்கு
புரட்சி தெரியும்

வச்சாத்தியும்
மகாமக குளமும்
பரமக்குடியும்
நேற்றின்றைய புரட்சிகள்

லிபியாவிலும்
புரட்சிப் படை
42 ஆண்டுகள் ஆட்சியை
அகற்றியது

புரட்சியால்
புதிய உலகமானதோ
மாற்றங்களால்
மக்கள் மகிழ்ந்தனரோ

குமுதம், ஜூவி.போல்
சன், மிரர், கார்டியன்
நேட்டோவின், அமெரிக்காவின்
புகழ் பாடின

ஊழல் செய்தாலும்
போலீஸ் கொன்றாலும்
சட்டம் ஒழுங்கும்
மனித உரிமைகளும்

காக்கப்பட்டதாக
காகிதத்திலும்
காணொளி செய்திகளிலும்
நீலிக்கண்ணீர் வடித்தனர்

போர் முடிந்தது
செய்திகளும் முடிந்தது
ஆனால்
உண்மைகள்

கஷ்மீரத்திலும்
இலங்கையிலும்
லிபியாவிலும்
நுகர்வு பொருள்- பெண்கள்

ஆப்ரிக்காவின் வடக்கு
அரபுகளின் தேசம்
ஆயினும் கருப்பர்கள்
அத்தேசத்தை கட்டியமைத்தனர்

புரட்சியால் கருப்பர்கள்
புலம் பெயர்ந்தனர் – ஆம்
பாப்பாத்தியின் ஆட்சியில்
சூத்திரர்கள் வாழ முடியுமா?

அகதி முகாமென்பது
பெண்களுக்கானது
வீரப்பன் வேட்டையில்
வச்சாத்தியும் அப்படியே

போரிலும்
போருக்கு பிந்தியும்
துப்பாக்கி முனையில்
பெண் போகப் பொருளானாள்

போருக்கு பிந்திய
லிபியா
புரட்சியின் தலைமையிலிருக்கும்
தமிழகம்

போர்டும், ஹுண்டாயும்
போட்டியிடுவதை போல்
அமெரிக்க, சீன
எண்ணை நிறுவனங்கள்

அம்பானியை கண்டுபிடிக்கலாம்
அங்கொரு கையாளாக
அள்ளஅள்ள குறையா
எண்ணையை சூறையாட

என்ன செய்வோம் தமிழர்களே
லிபியாவும் தமிழகமும்
ஒன்றென
நிம்மதியாய் தூங்குவோம்








9 கருத்துகள்:

Shanmugam Rajamanickam சொன்னது…

தூங்கிட்டேன்.

rajamelaiyur சொன்னது…

புரட்சியான கவிதை

பெயரில்லா சொன்னது…

நிம்மதியாய் தூங்குவோம்...-:)

நல்ல புரட்சி கவிதை...

Unknown சொன்னது…

கிட்டத்தட்ட உங்கள் கருத்தை எதிரொலிக்கும் எனது கமென்ட்.. minorwall said...
///////Thanjavooraan said...
ஜப்பான் நண்பர் எழுத்தில் நயம் காணப்படுகிறது. "குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி என்பது ஏது?" என்று ரத்தக்கண்ணீரில் எம்.ஆர்.ராதாவுக்குப் பின்னணியில் ஒரு பாடல் ஒலிக்கும். கு.சா.கிருஷ்ணமூர்த்தியின் பாடல் என நினைவு. இவருடைய கதையில் வரும் பெரியவருக்கும் இந்தப் பாடல் பொருந்தும். நீதிமன்றம், வழக்கு, தீர்ப்பு, தண்டனை இவைகள் எல்லாம் செய்த குற்றத்துக்குத்தின் தொடர் விளைவுகள். தண்டனையின் நோக்கம் குற்றவாளளி திருந்த வேண்டும் என்பது. ஆனால் கடைசி வரை தான் செய்தது என்ன என்பதையே உணராமல் ஒருவன் இருந்தால், அவன் செய்த அடாவடி, குற்றம், ஊழல் எல்லாமே நியாயமான நடவடிக்கைகள்தான் என்று திரும்பத் திரும்ப கோயபல்ஸ் பாணியில் நிறுவ முயன்றால், என்ன பயன் விளையும்? தன்னுடைய மனம் திருந்தாமல் எவனும் பிறர் மனத்தைத் திருப்தி செய்துவிட முடியாது. 'தன் வினைத் தன்னைச்சுடும், ஓட்டப்பம் வீட்டைச் சுடும்' என்பார்கள். நன்மையும், தீமையும் பிறர் தர வாரா என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். ஜூலியஸ் சீஸரைக் கொன்றது எத்தனை நியாயம் என்று நிறுவ முயன்றவனின் வாசாலகத்தைப் படித்திருக்கிறோம். மெக்சிகோவில் வாழ்ந்த "விவா சப்பாட்டா" எனும் புரட்சி வீரனின் சரித்திரத்தைப் படித்துப் பாருங்கள். செய்த வினைகள், திரும்பவும், செய்தவனுக்கே பரிசாக வந்ததாகத்தான் நமது புண்ணிய பூமியில் பெரியோர்கள் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இல்லாவிட்டால் பெரும் தொகை பணத்தோடு நாம் தெருவில் செல்லும்போது அதைப் பிடுங்கிக்கொண்டு ஓட, கைதேர்ந்த வழிப்பறிக்காரர்களைத் தவிர, சாதாரண மக்கள் துணிவதில்லையே. ஏன்? தண்டனைக்கு பயந்தா? போலீசுக்கு பயந்தா? இல்லை, இந்த மண்ணின் தார்மீக உணர்வு அது குற்றச் செயல் என்கிற உணர்வு. அது இல்லையென்றால், ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும். ஜப்பான் மைனரின் அருமையான உருவகக் கதைக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்./////

தங்களின் கருத்துப் பதிவுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி..
தங்களின் கருத்துரையில் தனிமனித வாழ்வுக்கு என்று கூறப்பட்ட அறிவுரைகளை முற்றிலும் ஏற்றுக்கொள்கிறேன்..
வெற்றிபெற்றோர் பக்கமே நியாயம்..வல்லவன் வகுத்ததே வாய்க்கால்..என்றெல்லாம் பொது விஷயங்களுக்கு யார்பக்கம் உண்மையான நியாயம்..எந்த அடிப்படையில் வெற்றி என்பது இன்னும் புரியாமலே இருக்கிறது..
துரியோதனன் இல்லாமல் அர்ஜுனன் இல்லை...பல சமயங்களில்..
ஒரு வெற்றியை நிறுவ ஒரு தோல்வியாளன் தேவையாகிறான்..
நாணயத்தின் இரண்டுபக்கங்களாக இது அமைகிறது..
சதாம் ஹுஸ்செய்ன், கடாஃப்பி என்று சமீபத்திய தலைகளின் வீழ்ச்சியிலும்
இதே வழியிலே வல்லவன் வகுத்ததால் வரலாறு மாறுகிறதோ என்றே தோன்றுகிறது..
இலங்கையிலே இப்போது நடக்கும் ஆட்சி வெற்றிபெற்றவர்களால் செய்யப்படுவது என்ற அடிப்படையில் பார்த்தால்
அவர்களின் செயல்கள் நியாயம் என்ற அடிப்படையில் இந்த வெற்றியை இயற்கை வழங்கியிருக்கிறது என்றே பொருள் கொள்ள நேரிடுகிறது..இயற்கையின் தீர்ப்பு அதுவானால் அதை ஏற்க மனம் ஒப்பவில்லை..மனிதர்கள் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கிறார்கள் என்பதை விடுத்து இயற்கையும் கிரகங்களுமே தீர்மானிக்கின்றன என்றால் அந்தப் புதிரான விஷயம் எனக்கு இன்னும் விளங்கவில்லை..

பெயரில்லா சொன்னது…

அப்பப்பா அரசியல்!
சிக்கலப்பா! எனக்கு வேண்டாமப்பா!
ஏனென்றால் ஒன்றும் சரியில்லப்பா.
வேதா. இலங்காதிலகம்.

சிவகுமாரன் சொன்னது…

என்ன நீங்க ? நாம 2020 க்கான திட்டங்கள் வகுத்து அதை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கோம். என்ன ஒரு புரட்சி ! ( என்னது .. நாளைக்கு கரண்டு இருக்குமோ தெரியாதா --- அட அது தாங்க புரட்சி )

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

Followers Gadget இணைப்பீர்களேயானால் தொடர்வதற்கு வசதியாக இருக்கும் அய்யா.

பெயரில்லா சொன்னது…

தங்களிற்கும் தங்கள் குடும்பத்தாரிற்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.
வேதா.இலங்காதிலகம்.


அ.பாண்டியன் சொன்னது…

நல்லதொரு சிந்தனையைத் தாங்கிய கவிதை. தொடருங்கள் ஐயா
-----
தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் எனது அன்பான உழவர் திருநாள் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

மேல்பாதி திரௌபதி

ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...