ஞாயிறு, மார்ச் 6

குழந்தை தேடிய கடவுள்

கடந்த ஞாயிறு
அடர்ந்த முடிதிருத்த
அகவை ஏழுகொண்ட
அருணனை
அழைத்து சென்றேன்

அருகிலிருந்த அங்காடியில்
வண்ணப் மீன்கள்
காதல் பறவைகள்
அவற்றோடு 
கோழிக் குஞ்சுகள்

ஆடிக் குதிக்கும் பருவத்தில்
ஆசை பிறந்தது
ஓரு குஞ்சு வளர்க்க
ஆயிரம் காரணம் சொல்லியும்
அடம் பிடித்ததால்
ஆகட்டுமென ஒன்று வாங்கினேன்

இருக்கும் மனிதருக்கே
இடப் பற்றாக்குறை
இதில் இரண்டாம்தளம் வேறு
இங்குமங்கும் பார்த்து
பலகனியில் இட ஓதுக்கீடு

கோதுமை அரிசி குருணை
குடிக்க தண்ணீர் என
குதுகல ஆரம்பம்

கோழிக்குஞ்சு வந்ததை
குடியிருப்பிலுள்ள
குட்டிக்களுக்கு தெரிவிக்க
அவர்களும் விஜயம்

அருணன்
படிப்பை மறந்தான்
விளையாட்டை மறந்தான்
நண்பர்களை மறந்தான்
ஆம் 
அவனுக்கு
தோழனாக
விளையாட்டு பொருளாக
ஆனது கோழிக்குஞ்சு

காலை கண்விழித்து
வணக்கம் சொல்வது
கொஞ்சுவது எல்லாம்
எங்களையல்ல... 
கோழிக்குஞ்சை 

மாலை பள்ளி விட்டதும்
அம்மாவை கேட்பது
கோழி சாப்பிட்டதா
தண்ணீர் குடித்ததா

இரவிலும் 
இதே கதை
அம்மா போ
எனது குட்டிக் கோழிக்கு
சாப்பாடு ஊட்டு

மகனின்
அன்பையும்
அதிகாரத்தையும் கண்டு
அவளுக்கு பூரிப்பு

அருகிலமர்ந்து
ஆனந்தப்பட்டு
தாவி மேலேறி
தவழ்நத அக்குஞ்சு
இன்றில்லை

ஏனம்மா செத்து போச்சு
உயிர் வராதா
ஒரே சோகம்

வாடிய முகம்
காலை உணவை மறுத்து
கவலையோடு உட்கார்ந்திருக்கிறது

அப்போதுதான் கேட்டான்
அம்மா 
கடவுள் உயிர் கொடுக்க மாட்டாரா

அம்மாவோ
செத்த பிறகு 
உயிரேது என்றாள்

ஆம் 
இருப்பவன் 
செய்த உயிரை
இல்லாதவன்
எப்படி தரமுடியும்6 கருத்துகள்:

ஊரான் சொன்னது…

வாழ்த்துக்கள்!

padaipali சொன்னது…

அருமை நண்பரே...

Senthil சொன்னது…

நீங்கள் கோழி குஞ்சு இரந்ததற்கும் மனிதர்கள் இரப்பதற்கும் காரணம் கடவுள் என்று சொல்கிறீர்கள். ஆனால் மேற்கண்ட நிகழ்விலிருந்து மிகப்பெரும் ஒரு படிப்பினையை அருண் கற்றுக்கொண்டான் என்பதை நீங்கள் மறுக்கமுடியாது,

எல்லா உயிரிணங்களையும் சமமாக பாவிக்கும் மனப்பக்குவம்,

மகிழ்ச்சியை நண்பர்களிடம் பங்கிட்டுகொள்ளும் மனோபாவம்,

தாய் தனக்கு சரியான பதிலை எல்லாவற்றிக்கும் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையை,

உங்களை எப்படி பணியவைக்கவேண்டும் என்ற கலையை,

ஒரு உயிரின் மகத்துவத்தை, ஒரு கோழி குஞ்சு இறந்து அருணனுக்கு கற்றுக்கொடுத்தளது என்றால் அது கடவுளின் கருனையே.

கோழிய சிக்கன் 65, சிக்கன் கறி என்று வகைவகையாக உன்னும் மனிதர்கள் கூட ஒருநாளும் வருத்தப்பபடிருக்க மாட்டார்கள்.

வாழ்க மனிதநேயம்.

அ. வேல்முருகன் சொன்னது…

அருணனிற்கு கோழி மட்டுமல்ல காக்கை கூட தோழன் தான்

தினமும் சோறிட்டு தண்ணீர் வைத்துக் கொண்டிருக்கிறான்

ஆனால் ஒன்று கடவுள் மீதிருந்த அவன் நம்பிக்கை சற்று ஆட்டம் கண்டு விட்டது.

அது மட்டும் உண்மை

Sasi Kala சொன்னது…

தங்களின் இந்தப்பகிர்வை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன். நேரம் இருப்பின் வருகை தரவும்.
http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_13.html

2008rupan சொன்னது…

வணக்கம்
இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

நீதி மய்யம்

அரிதார மய்யம் அரசியல் மய்யமாகுமோ பரிதாப கூட்டம் பகல்கனவு காணுது கருப்பும் சிவப்பும் கலந்து செய்த கலவை தானென கட்டியம் க...