திங்கள், மார்ச் 21

கனவா?......... பேராசையா?........

மணமுடித்த மங்கையான்
          மனதில் கொண்டது ஆசையா
கனவாகும் காரணத்தால்
          கணக்குப்படி எனக்கவை பேராசையா
 என்னவென கேள்வியால்
          ஏறிட்டு நோக்கும் விழிகளே
கணக்கிடும் தோல்வியால்
          கவலை தீரவும் வழியில்லையே

கணவனுடன் கைகோர்த்து
          காலாற நடந்து - மாலை
மணக்கும் மல்லிகை
          மரிக்கொழுந்து சூடி - நல்ல
வண்ணத்திரைப் படம்பார்த்து
          வரும்வழியில் உணவுண்டு - உடன்
மென்பனிக் கூழருந்தி
          மஞ்சத்தில் மகிழ்ந்திருக்க - கனவு

வாக்கப்பட்ட மனுசனுக்கு
           வடித்துக் கொட்டி வசவுவாங்க
ஏக்கப்பட்ட மனதுக்குள்
           ஏகப்பட்ட காயங்கள் உருவாக
ஆக்கப்பட்ட கனவுகளுக்கு
           ஆப்பறைந்து யாவும் சருகாக
மீட்கப்படுமோ உணர்வுகள்
            மீண்டும் வசந்தம் வருமோ

உள்ளக் கொதிப்பை
             உறவிடத்தில் சொல்லி கலங்கிட
தள்ளியது புதைகுழியென
             தானும் சேர்ந்து கவலைபட
சொல்லிய கனவுகளை
             சொந்தம் ஒருநாள் செய்திட்டு
மெல்ல கூறியது
             மகளே இப்போது மகிழ்ச்சியா

இணையாகுமா இதமாகுமா
             இவர்கள் செய்வது எனக்கு
துணையென்றாலும் துணையாகுமா
             தவறான கணக்கு சரியாகுமா
தொலைந்தது கிடைக்குமா
             துவளும் உள்ளத்தின் ஏக்கவினா
வலையில் விழுந்தபின்
             வாழ்க்கையை யோசிப்பது வண்ணகனா

குறிப்பு:  17 ஆண்டுகளுக்கு முன் சந்தித்த ஒரு தோழி தனது கனவு கலைந்த விதத்தை கூறிய போது ஏழுதியது. தற்போது பழக்கப்பட்ட வாழ்க்கையை வாழ கற்றுக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:

இந்தியனா

மனிதனாய் இருக்காதே இந்தியனாயிரு மனிதன்தான் என்றால் - நீ தீவிரவாதி மக்களை நேசிப்பவனா - நீ மாவோயிஸ்டு அரசுக்கு எதிராக கேள...