திங்கள், மார்ச் 21

எங்கு சென்றாய் என்னவளே...

மங்கும் மாலை யெல்லாம்
         மங்கை உனது நினைவுதான்
அங்கு மிங்கும் சுற்றிய
         அந்த பொழுது இனிமைதான்
எங்கு சென்றாய் என்னவளே
         எதிலும் உனைநான் தேடுகிறேன்

தங்கமே உன்னை காணாது
         தவிப்பவனை தணிக்க வாராயோ
திங்கள் கடந்தும் அன்பே
         திசைதான் மறந்து போனாயோ
அங்கம் மெலிய அவரவர்
         ஆரிவன் என்று கேட்கின்றனர்

சித்திரமே என்சொத்து பத்திரமே
         சீக்கிரம் வந்திடு அருகே
நித்திரையும் எனக்கு சித்திரவதையே
         நீயிங்கு இல்லை உயிரே
முத்திரையாய் நின்னிதழ் பதித்தால்
         மூச்சுக்கு உத்திர வாதமே

கருத்துகள் இல்லை:

திரளழகு

திரளழகை தீபவொளி திருத்தி எழுதிட முரணேது முந்தானை முகமன் கூறிட மரகதவுடல் மச்சானை மகிழ்ச்சியில் ஆழ்திட சரசங்கள் பயின்றிட சரணடை பேரழகே நின்னசைவ...