செவ்வாய், மே 17

கடவுளுக்கும் வேனிற்கால விடுமுறை


24 மணிநேரமும்
இகலோக மனிதர்களிடம்
சஞ்சரித்து
இம்சை கொண்டார்

பாவ புண்ணியங்களுக்கு
மன்னிப்பு அளித்து
பைத்தியம் பிடித்துவிட்டது
பரமபிதாவின் வாரிசுக்கு

ஓய்வு
உல்லாசம்
விடுமுறை
எதையோ சொல்லிக்கொள்ளுங்கள்

உழைத்து களைப்பவருக்குதான்
ஓய்வும் உல்லாசமா
உலகையே ரட்சிப்பவருக்கும்
ஓர் உல்லாசம் தேவைதான்

வெனீஸ் நகரத்தின்
வீதியுலாவை காட்டிலும்
வளைந்து நெளிந்து செல்லும்
கொண்டேலா படகு பயணம்
புது அனுபவம் – கடவுளுக்கு

ஆண்டவரின் பயணமென்றால்
அதற்கேற்ற
அணிவகுப்பு, அலங்காரம்
ஆகா கண்கொள்ளா காட்சி

தென்றலோ புயலோ
திசை திருப்பும்
வல்லமை கொண்டவர் – தன்
திருமுடி இழந்தார்

ஆம்
காற்றில் கிரீடம்
கழன்று விடுமென்று
கழற்றி வைத்து விட்டாராம்

கருத்துகள் இல்லை:

பனிவிழும் மலர்வனம்

பனிவிழும் மலர்வனம் பரிதியெழ மனங்கவரும் இனியன நிகழும் இணையென நீயாக எனினும் ஏந்திழையே எங்குனைக்  காண்பேன் கனிவுடன் வந்தென் கரம்தனைப்  பற்றுவா...