சனி, மே 21

வீடு


எலியும் பூனையும்
இன்ன பிற
“ஜந்துக்கள்” வசிக்க
எளிதாய் இருப்பிடம்
கண்டு பிடித்துவிடுகிறது

நான்கு சுவர்களுக்குள்
நாலும் நடப்பது
நாகரிகம் என்று
நகரினுள் தேடினேன்
நல்லதொரு வளை

மாட மாளிகைகள்
அடுக்கு மாடிகள்
புறாக் கூண்டுகள்
மாறா குடிசைகள்
தகுதிக்கேற்ற வளைகள்

விலைக்கென்றாலும்
வாடகைக்கென்றாலும்
“விஜ்டெரியன்” மட்டுமென
விளம்பரத்திலேயே சொல்லிடும்
விவரமானவர்கள்

லட்சத்தில்
லட்சணமான வீடு
லட்சிய இடத்தில் தேட
லாயக்கில்லை நாமென
பொருளாதாரம் சொல்லுது

அடுக்கில் ஒரு தளப்பகுதி
அதுவொரு கோடிக்கு மேல்
இடுக்கில் ஒரு பகுதியெனில்
இல்லை பல வசதிகள்
இருப்பினும் விலை இலட்சங்களில்தான்

ஆயிரங்களில்?…………..
ஆட்சி செய்வோர்
இலவச வீடென்றார்
அதுவொரு காடன்றோ
கடைகன்னியும் காத தூரமன்றோ

சராசரியும் நடுத்தரமும்
சந்தித்த வெளி
ஊருக்கு வெளி - ஆம்
புற நகரும்
புறா கூண்டுதான்

உழைப்பவனெல்லாம்
ஊருக்கு வெளியே
பேருக்கு வாழ்க்கை
ஆறு மணி வேலைக்கு
நாலு மணிக்கு புறப்பாடு

பேரூந்தோ இரயிலோ
போய் பிடிக்க
அரைமணி வேண்டும்
மருத்துவரோ மருந்தோ
பக்கத்து ஊருக்கு போக வேண்டும்

எப்படியோ
இந்த நகரில்
எல்லாம் கிடைக்க
இருபது ஆண்டு வேண்டும்

ஏரிக் குளமெல்லாம்
இல்லாதவர் இடமென
என்றிக்கையில்
வசதி வாரியமென
வாரி சுருட்டியது அரசு

எல்லோருக்கும் வளை
என்பது ஒரு கவலை
ஏக்கங்கள் கனவுகள்
என்று நிறைவேறும்?........
நன்று யோசியுங்கள்……….

3 கருத்துகள்:

நம்பிக்கைபாண்டியன் சொன்னது…

வீடு வாங்க நினைத்து முடியாதவர்களில் ஆதங்கத்தை அழகாக சொல்கிறது கவிதை!

பெயரில்லா சொன்னது…

வலை என்பது தவறு வளை (பொந்து ) என்று இருக்க வேண்டும்

அ. வேல்முருகன் சொன்னது…

நன்றி, திருத்தி கொண்டேன்

தேர்ந்தெடுங்கள்.........

ரஃபேலா போபர்ஸா அடிமைகளா 2 ஜியின் வாரிசுகளா தண்டகாரண்யா தூத்துக்குடி ஸ்டெர்லைட் கச்சத் தீவு காவேரி தண்ணீர் மாறிடுமோ - தங்க...