செவ்வாய், ஜூன் 28

வீடு – வங்கி கடன் கட்ட முடியாதவர்களின் கவனத்திற்கு அத்தியாயம்-2


நிதிச் சொத்து மறுசீரமைப்பு மற்றும் பிணை காப்பு செயலாக்கச் சட்டம் 2002, (SARFAESI Act 2002)  மத்திய அரசால் வங்கிகளுக்காக கொண்டுவரப்பட்டஒரு சட்டம்.  2002 ஆண்டுக்கு முன்வரை பொதுவான சிவில் சட்டம் கொண்டே கடன் வசூல் செய்யப்பட்டது.  வங்கிகளுக்காக 1993 ஆம் கடல் வசூல் தீர்ப்பாயம் தொடங்கப்பட்டது.  இவை பத்து லட்சங்களுக்கு மேற்ப்பட்ட கடன் வசூல் செய்வதற்கான வழக்கை நடத்துவதற்காக தொடங்கப்பட்டது.  அதற்கு குறைவான கடனை பொதுவான நீதிமன்றத்தில்தால் தொடரமுடியும்

வாராக் கடன் அல்லது வினையாற்ற இயலா சொத்து (NPA)


SARFAESI Act 2002 - Sec 13 (2) notice

சரி வீட்டு கடன் விடயத்திற்கு வருவோம்.  எந்தவொரு கடனும் வாராக் கடன் என வகை செய்யப் பட்ட பின் வசூல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏற்கனவே சொன்ன மாதிரி மூன்று மாதத்திற்கு மேல் உள்ள வாராக் கடன் மீது நடவடிக்கை எடுக்க அடுத்த மூன்று மாதம் வரை காத்திருப்பார்கள்.  நினைவூட்டு கடிதம் அனுப்பி பார்ப்பார்கள்.  அதாவது ஆறு மாதம் கடந்தவுடன் மேற்படி சட்டத்தின் கீழ் விதி 13 (2) படி ஒரு நோட்டிஸ் அனுப்புவார்கள்.  இது சட்டத்தின் முதல்படியும் முக்கியமான அறிவிப்பும் ஆகும். இதை கேட்பு வசூல் அறிவிக்கை அல்லது 13 (2) நோட்டிஸ், SARFAESI notice எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்.  இதை பதிவு தபாலில் ஒப்புகை சீட்டோடு (RPD) அனுப்புவார்கள்.

மேற்படி அறிவிக்கை கடன்தாரர் மற்றும் ஈட்டுறுதி கொடுத்தவர் (ஜாமீன்தாரர்) ஆகியோருக்கு அனுப்பபடும்.  ஒவ்வொருவரும் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகை சீட்டை  தபால் மூலம் வங்கி பெற்றுக் கொள்ளும். இவ்வறிவிக்கை பெற்றுக் கொண்ட நாளிலிருந்து கடன்தாரர் மற்றும் ஈட்டுறுதி கொடுத்தவர் 60 நாட்களுக்குள் நிலுவைத் தொகை செலுத்தியோ அல்லது மொத்தமாகவோ கடனை தீர்த்துக் கொள்ள வேண்டும்.  அவ்வாறு செலுத்த தவறும் பட்சத்தில் வங்கி அடுத்தக் கட்ட நடவடிக்கைக்கு சென்று விடும்.

அதற்கு முன் இந்த அறிவிப்பை பற்றி சற்று விளக்கமாக பார்ப்போம்.  கடன் பெற்றவர் கடன்தாரர்.  ஈட்டுறுதி கொடுத்தவர் (guarantee) ஜாமீன்தாரர்.  இருவரும் வங்கி அனுப்பும் நோட்டிஸை பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு பெற்றுக் கொள்ள மறுக்கும் பட்சத்தில்லோ அல்லது யாரேனும் ஒருவர் பெற்றுக் கொள்ள இயலாத பட்சத்தில் வங்கி அதற்கு இணையான சேவை செய்ய வேண்டியுள்ளது.
அதாவது கடன்தாரர் மற்றும் ஈட்டுறுதி கொடுத்தவர் செலவில் தங்களுக்கு அனுப்பிய நோட்டிஸை தினசரி செய்தித்தாளில் வெளியிடுவர். இவை மாநில மொழியில் ஒரு தினசரியிலும் ஆங்கில தினசரியில் ஆங்கிலத்திலும் வெளியிடப்படும்.  அவ்வாறு வெளியான நாளிலிருந்து 60 நாட்கள் கணக்கிடப்படும்.  மேற்கண்ட  நோட்டிஸ் இரு தினசரியில் வெளியிட ஆகும் செலவு ரூ.15000 முதல் ரூ.20000 வரை ஆகலாம்.

இந்த அறிவிக்கையில் என்ன என்ன இருக்கும்.  கடன்தாரர் மற்றும் ஜாமீன்தாரர் முகவரியிட்டு தங்கள் கடன் பெற்ற விவரத்தை தெரிவித்திருப்பார்கள்.  அதில் நோட்டிஸ் தேதிவரை உள்ள நிலுவைத் தொகை வட்டியோடு குறிப்பிடப் பட்டிருக்கும். அந் நோட்டிசோடு மூன்று வகை இணைப்பு குறிப்புகள் குறிப்பிடப் பட்டிருக்கும்.  அவையாவன

இணைப்பு 1 ல்,  கடனின் தன்மை, நாளது தேதிக்கான நிலுவைத் தொகை ஆகியவை குறிப்பிட பட்டிருக்கும்.

இணைப்பு 2 ல், கடன் பெற்ற போது கடன்தாரர் மற்றும் ஜாமீன்தாரர் எழுதி கையொப்பமிட்ட ஆவணங்கள் அவற்றின் தேதி, அதாவது தங்களது கடன் கோரிக்கை மனு நாள், ஓப்பந்தம் ஏற்படுத்திக் கொண்ட நாள் மற்றும் கடன் தொகை, ஈட்டுறுதி கொடுத்த நாள் மற்றும் அதன் தொகை, அடமான பத்திரம் எழுதிக் கொடுத்த நாள் அதை வங்கிக்கு தாங்கள் ஏற்பு கொடுத்த நாள் என அனைத்து விவரங்கள் அடங்கியிருக்கும்

இணைப்பு 3 ல் பகுதி 1 ல் அசையும் சொத்துக்களின் விவரம் குறிப்பிடபட்டிருக்கும்.  இது வீட்டுக் கடன் பெறுவோறுக்கு பொருந்தாது.

பகுதி 2 ல் அசையா சொத்துக்களின் விவரம் முழுமையாக குறிப்பிடபட்டிருக்கும்.  அதாவது தங்களின் கிரயப் பத்திரத்திலுள்ள  சொத்து தொடர்பான அனைத்து விவரங்களும் அதன் நான்குமால்கள், மனையென்றால் அதன் பரப்பளவு, வீட்டின் பரப்பளவு அனைத்தும் தெளிவாக குறிப்பிடப் பட்டிருக்கும்.

ஒன்றிற்கு மேற்பட்ட கடன்தாரர் மற்றும் ஜாமீன்தாரர் என்றாலும் மேற்கண்ட நோட்டிஸ் அனைவருக்கும் அனுப்படும்.  ஜாமீன்தாரர் எனது நன்மைகாக கையெழுத்திட்டார் அவருக்கு அனுப்ப கூடாது என கோரிக்கை வைக்க இயலாது.   ஜாமீன்தாரர் பதிலி கடன்தாரர் ஆவார்.  எனவே அவரும் கடன்தார்ராக கருதப்படுவார். 
ஒருவேளை கடனுக்காக அடமான சொத்தை விற்றும் கடன் பூர்த்தியாகவில்லையென்றாலும், கடன்தார்ரால் மீதக் கடனை செலுத்த வழியில்லை என்றாலும் ஜாமீன்தார்ரிடம்தான் மீதக் கடனை வசூல் செய்ய நேரிடும்..

சரி, எனக்கு அனுப்பிய நோட்டிஸில் குறை, அல்ல எனக்கு கால அவகாசம் வேண்டும், ஏதேனும் வழியுண்டா அதை அடுத்த அத்தியாத்தில் பார்க்கலாம்


இதையும் படிக்கவும் வீடு-வங்கிக் கடன் அத்தியாயம் 1




கருத்துகள் இல்லை:

மேல்பாதி திரௌபதி

ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...