திங்கள், ஜூன் 27

யார் மரணம் எப்படியிருக்கவேண்டும்?!


கொலு மண்டபத்திலா?
ஐநா மன்றத்தாலா? நோயிலா?
துயிலும் போதா? – அல்ல
அந்த போராளிகளாலா?....

அடையாளம் தெரியாமல்
அனாதையாகவா
அரசு மரியாதையுடன் – 21
குண்டு முழங்கவா

ஆம் அகிலமும்
அரசு இயந்திரமும்
அதிகாரமும் - நான்
அசைந்தால் அசையும்

மாட மாளிகைகள்
ஏவல் பணியாளர்கள்
மகுடம் தந்த பரிசு – ஆனால்
மாறிடுமோ?!

மெழுகுவர்த்தியும்
ஐநாவும்
அரசியல் மொக்கைகளும் – என்
ஆயுள் காப்பீடுகள்

ஆயினும்
அங்கிங்கொன்றாய்
அலையும் – அந்த
மனிதர்களால்

ஆடையின்றி
கைகள் பிணைத்து
கண்களை கட்டி -  மூளை
சிதறி சாவேனோ

உற்றார் உறவினர்
பெற்றோர் சகோதரர்
அங்ஙனமே அடுக்கி – அதனை
காட்சி பொருளாக்குவீரோ

வல்லுறவு கொண்டு
கொல்லுவாயோ – அதனை
செல்பேசி படமெடுத்து
குதுகலிப்பாயோ

எஞ்சியவன் எனைபார்த்து
அஞ்சி அழுவானோ
அரற்றுவனோ – என்
நிலைகண்டு இரங்குவானோ

வெடிசத்தம் கேட்டால்
வேடிக்கையாயிருந்தேன்
விரைந்தோடுகிறேன் – இன்று
பதுங்கு குழி தேடி

பல்லக்கில் பவனி
பன்னீரில் குளித்த
பளிங்கு மகளவள் – பாவிகளே
பாடை கூட இல்லையோ

பத்தொடு பதினொன்றாய்
ஒட்டு துணியுமில்லாமல்
கொட்டி வைத்த குவியலில் – ஒரு
கோமகனின் குலமகளா

கையிழந்து காலிழந்து
கண்ணும் இன்னும் பிற
உறுப்பிழந்து – குருதியோடு
கூப்பாடிட

குண்டடிப் பட்டு
மண்டை உடைந்து
மற்ற உறுப்பும் சிதைந்து – சற்று
பாருங்கள், காப்பாற்றுங்கள்

கொண்டு சென்ற இடமோ
அப்பலோ அல்ல
எப்பவோ நான் இடித்த
ஒரு மருத்துவமனை
  
சிதிலமடைந்த கூரை
கிடைக்காத மருந்து
உயிர் பிழைக்க – அய்யகோ
உத்திரவாதமில்லையோ

வீடு கட்டும் செங்கலை
எடுத்து போடயிலே
பார்த்து பத்திரம்  என்றேன்
உடைந்து வீணாகுமோ என்று

காடு போக
கண் மூடிவிட்டாரென்றால்
கல்லை விட  கேவலமா
கன்னாபின்னாவென்று குவித்திருக்கிறீர்கள்

காட்டில் ஓலையை இழுத்தால்
புழுதி கிளப்மென்று தூக்கி செல்வர்
கூட்டில் உயிரில்லை என்றா – புழுதி
கூட்டி இழுத்துச் செல்கிறீர்

வேளைக்கொரு ஆடை
விருந்துக்கொரு ஆடை
விதவிதமாய் அணிந்து – இன்று
வெற்றுடலாய்

யாரது
அங்கவயம் திறந்திருக்க
சங்கடமில்லையோ – அதனை
காட்சி படமெடுக்கிறாய்

எட்டி வேறு உதைப்பாயோ
ஏதுமற்ற சடலமடா
ஏகத்தாள பேச்சேனடா – அடேய்
எல்லோரும் மனிதர்தானே
  
எட்டுவகை உணவு
எடுத்து வைக்க ஆளு
என்று வாழ்ந்த - மகனின்று
தட்டேந்தி நிற்கிறான்

பளிங்கு மாளிகையில்
பஞ்சணையில் படுத்துறங்கியவன்
பிளாஸ்டிக் கூடாரத்தில்-நெருஞ்சி
காட்டில் கண்யருகிறான்

இத்தனையும் நடக்குமோ
எனைகாக்க யாருமில்லையோ
ஏற்கனவே நடந்திருக்கிறது – எனினும்
எனக்கு நம்பிக்கையிருக்கிறது

என் முன்னோடிகள்
கண் முன்னாடி போனகாதை
நான் அறிந்தாலும்- ஐநா
தள்ளிப் போடும் சாவை

யாரிந்த முடிமன்னன்
ஏனிந்த புலம்பல்கள்
இங்ஙனமாகுமோ மரணம் – இனி
சங்கதி சொல்ல வேண்டியது நீங்கள்

2 கருத்துகள்:

ரேவா சொன்னது…

இன்றே முதல் வருகை உங்கள் தளத்தில்...பிறக்கும் போதே இறப்பு என்பது நிச்சயிக்க பட்ட ஒன்று...அந்த மரணம் வரும் விதம் பற்றி எழுதிய கவிதை அருமை...வாழ்த்துக்கள் சகோதரரே

வேல்முருகன் அருணாசலம் சொன்னது…

தங்கள் வருகைக்கு நன்றி, சகமனிதன் இப்படி இறந்ததை கண்டு இதற்கு காரணமானவன் அப்படியே சாக வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானது

தேர்ந்தெடுங்கள்.........

ரஃபேலா போபர்ஸா அடிமைகளா 2 ஜியின் வாரிசுகளா தண்டகாரண்யா தூத்துக்குடி ஸ்டெர்லைட் கச்சத் தீவு காவேரி தண்ணீர் மாறிடுமோ - தங்க...