புதன், ஜூன் 29

அலைபேசி காதல்


உயிரற்று
உணர்வற்று
உடலாய் நடமாடினேன்

எனக்குள் ஒரு மாற்றம்
என்னவென யோசித்தேன்
எனைமாற்றியது காதல்

காதல் கண்வழியல்ல
காதுவழி நுழைந்தது
கண்ணாளா உன்குரலால்

அலைபேசியும்
அன்பேயுன் குரலோசையும்
அடியவள் வேண்டுவது

கடற்கரையோரம்
கைகோர்த்து
காலாற நடக்க ஆசை

காலநேரமும்
காண்போர் கண்களும்
கண்டிப்பதால்

மனவறையில் தோன்றும்
நினைவலைகளில்
நித்தம் வாழ்கிறேன்

1 கருத்து:

அம்பாளடியாள் சொன்னது…

எனக்குள் ஒரு மாற்றம்
என்னவென யோசித்தேன்
எனைமாற்றியது காதல்

காதல் கண்வழியல்ல
காதுவழி நுழைந்தது
கண்ணாளா உன்குரலால்

நிகழ்காலக் காதலை
நிஜமாகக் கண்முன் நிறுத்திய
அழகிய காதல்க் கவிதை!......
வாழ்த்துக்கள் ஐயா .நன்றி
பகிர்வுக்கு ....

மும்மொழிக் கல்வி

மும்மொழிக் கல்வி மூத்தக்குடி தமிழனுக்காம் முட்டாள்கள் முகாரி பாடுகிறார்கள் ஏட்டுக் கல்வி இந்தி பேசுபவர்களுக்கு இரண்டா? ஒன்றா? கேட்பது யார்? ...