புதன், மார்ச் 25

கடவுள்




கண்ணப்பனின் பக்தியை சோதிக்க
கண்ணில் இரத்தம் வடித்தவனே
கண்டத்தில் ஆலகாலம் நிறுத்தியவனே
என்னப்பனே எங்களுக்கு கதவடைக்காதே

உலகளந்த வாமன வடிவமே
உலகாளும் மாபலி கொரோனவை
மூன்றடி எடுத்து வைத்தே
மன்றாடும் மக்களை காப்பாற்று

பெண்ணால் பிறக்காத முருகனே
உன்னால் மடிந்தவன் சூரனே
ஆறு முகத்தில் கொரோனாவா
ஆறுகால உணவும் அரோகராவா


மகிசா சூரனல்ல - மக்களம்மா
மரணம் கொரோனாவால் வேண்டாம்மம்மா
மகேசுவரனின் வரமும் இல்லையம்மா
மலைத்தே கதவடைத்துக்  கொள்ளாதேம்மா







1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அனைவருக்கும் நலமே உருவாகட்டும்...

பேரண்டத்தின் பேரழகி

  கெண்டைக் கண்கள் தண்டைக் கால்கள் அண்டை அயலார் அண்ட நினைக்கும் பேரண்டத்தின் பேரழகி சிவந்த அதரங்களால் சிந்தியச் சொற்கள் அட்சரச் சுத்தமாய் ஆலா...