கண்ணில் அம்பொன்று
கணையாய்த் தொடுத்தே
காதலைப் பெருக்காதே
கண்ணா அமைதியில்லையே
காட்சிகள் விழியில்
காதலைக் கூட்டும்
கண்ணின் விழித்திரை
கதவடைத்துக் கொள்ளடி
தங்குத் தடையின்றி
தாமிரபரணி நீரோட்டமாய்
தமிழ் பேசுமழகில்
தட்டுத் தடுமாறினேன்
சொல்லும்....
சொல்லும் அழகும்
சொல்லச் சொல்ல
சொக்கிதான் போனேனடா
கனிய கனியப் பேசி
காதலின்பம் கூட்டி
காணாது போனவனே
காதல் பேச வாடா
மௌனம் காத்து
மனதை வதைத்தவளே
கோவை இதழில்
கொஞ்சி பேசடி
இளங்கன்றுக்கு
இட்ட வாய்பூட்டோ
இள மயிலே
இளகாதோ நின் மனமே
போதிமரப் போதனையோ
பேசாதுப் போனாயே
பொடா-தடா சட்டமோ
போட்டால் வாட்டமே
கண்மூடிக்
காட்சியை மறைக்கலாம்
வாய்மூடி காதல்
வசனத்தை நிறுத்தலாம்
கண்ணே எப்போதும்
கண்டபடி நினைக்கும்
கல்லான மனதை
கட்டளையிட்டு மூடுவியோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக